தமிழகத்தில் 3 நாட்கள் ரயில் சேவை நிறுத்தம்.! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.!!

0
239

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. அதன் காரணமாக, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றது.

அந்த வகையில் போக்குவரத்து சேவை முழுவதுமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களின் வசதிக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று, அக்டோபர் 31ஆம் தேதி மற்றும் நவம்பர் 7ம் தேதி ஆகிய மூன்று நாட்களுக்கு பராமரிப்பு பணிகளுக்காக ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

தாம்பரத்திலிருந்து 11.30, 12.10 , 12.30, 1.50 , 2.50 , 3.30 மணிகளில் சென்னை கடற்கரைக்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், சென்னை கடற்கரையில் இருந்து காலை 11 மணி, 11.30 மணி, 11.45 மணி, 12.20 மணி, 12.40 மணி, 1.40 மணி, 2.30 மணி ஆகிய நேரங்களில் தாம்பரத்திற்கு புறப்படும் ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும், சென்னை கடற்கரையில் இருந்து 11.15 மணி, 12 மணி, 1 மணி, 1.20 மணி, 2 மணி, 3 மணிக்கு செங்கல்பட்டுக்கு புறப்படும் ரயில்களும், கடற்கரை-தாம்பரம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

Previous articleபாரதியிடம் கையும், களவுமாக சிக்கப்போகும் அஞ்சலி!! ஒற்றை ஃபோன் கால், சிக்கித்தவிக்கும் கண்ணம்மா, அஞ்சலி!!
Next articleதமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here