தமிழக அரசிடமிருந்து 4 லட்சம்.. டிஜிபி க்கு பறந்த அதிரடி உத்தரவு!! ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு!
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தான் முருகானந்தம். இவர் ஓர் மாற்றுத்திறனாளி. இவர் வசிக்கும் பகுதியில் உள்ள தண்டபாணி என்பவர் வழக்கறிஞரான முருகானந்தம் மீது பொய் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சிறிதும் விசாரிக்காமல் காவல்துறை ஆய்வாளர் இவரை கூட்டி சென்றுள்ளார்.விசாரணை செய்யாமலேயே பின்பு அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனைய டுத்து வழக்கறிஞர் முருகானந்தம் கோவையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு மார்ச் மாதம் மூன்றாம் தேதி வெளியே வந்தார்.
வெளியே வந்ததும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்தார். இவர் புகாரை அடுத்து மனித உரிமை மீரல் தொடர்பாக இவருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக கூறியது. அதுமட்டுமின்றி இவரை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உத்தரவிட்டது. ஆனால் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முருகானந்தம் மனு தாக்கல் செய்தார்.
அதில், தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளேன் அதனால் 50 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று உரிய வசதிகள் எடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கானது இன்று அமர்வுக்கு வந்தது. அதில், காவல் ஆய்வாளரால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி முருகானந்தத்திற்கு 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
குறிப்பாக இந்த நான்கு லட்சம் ரூபாய் தமிழக அரசு தான் தர வேண்டும். அது மட்டுமின்றி காவல் ஆய்வாளர்கள் மாற்றுத்திறனாளிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பயிற்சி கொடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அனைத்து காவல் நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பராமரிக்க தனிப்பட்ட அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் டிஜிபிக்கு ஆணை பிறப்பித்துள்ளனர். தற்பொழுது மனு அளித்துள்ள முருகானந்தம் வழக்கு தொடர்பான செலவுக்கான பணத்தையும் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.