கொழுப்பை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்க உடனடி தீர்வு தரும் 4 பொருட்கள்!!

Photo of author

By Divya

கொழுப்பை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்க உடனடி தீர்வு தரும் 4 பொருட்கள்

 

 

உயிரைப் பறிக்கும் நோய்களில் முதலிடத்தை வகிப்பது மாரடைப்பு.கடந்த 10,15 வருடங்களுக்கு முன் வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் ஒரு நோயாக மாரடைப்பு இருந்தது.ஆனால் தற்பொழுது இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்களையும் பாதிக்கும் பொதுவான நோயாக மாறி கொண்டிருக்கின்றது.மேலும் மாரடைப்பு இன்றைய சூழலில் சாதாரணமாகி விட்ட நிலையில்,இது குறித்த போதிய விழிப்புணர்வோ,உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதலுதவி பற்றிய புரிதலோ பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்பதே கசப்பான உண்மை.

இந்நிலையில் மாரடைப்பு வருவதற்கு கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களை உட்கொள்ளுதல்,உடல் பருமன்,போதிய உடற்பயிற்சி இல்லாமை,தூக்கமின்மை இவைகளே முக்கிய காரணங்களாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி மாரடைப்பு ஏற்படாமல் உடலை கட்டுக்குள் கொண்டுவர கீழே குறிப்பிட்டுள்ள ரெமிடியை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

 

 

தேவையான பொருட்கள்:-

 

சுரைக்காய் – 1 கைப்பிடி அளவு

 

புதினா – 10 இலைகள்

 

கொத்தமல்லி – 1 கைப்பிடி அளவு

 

கருவேப்பில்லை – 15 இலைகள்

(அல்லது)துளசி

 

செய்முறை :-

 

முதலில் சுரைக்காய் ஒன்றை நறுக்கி கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.மேலும் மேலே குறிப்பிட்டுள்ள புதினா,கொத்தமல்லி,கருவேப்பிலை உள்ளிட்ட பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.பிறகு ஒரு டம்ளரில் எடுத்துக்கொண்டு பருக வேண்டும்.

 

இவ்வாறு 6 முதல் 7 மாதங்களுக்கு தொடர்ந்து குடித்து வர 90 % ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு குறையும்.மேலும் உடலில் ஏற்படும் ரத்த அழுத்தம் சம்மந்தமான பிரச்சனை உடனடியாக குறைந்து உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.மேலும் கண் பார்வை குறைபாடு,முடி உதிர்தல் பிரச்சனைகளுக்கும் இந்த பானம் தீர்வாக அமையும்.