கருத்தடை அறுவை சிகிச்சையால் 4 பெண்கள் மரணம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள் !

Photo of author

By CineDesk

கருத்தடை அறுவை சிகிச்சையால் 4 பெண்கள் மரணம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள் !

CineDesk

4 women die due to sterilization surgery! The people of the area are in fear!

கருத்தடை அறுவை சிகிச்சையால் 4 பெண்கள் மரணம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள் !

தெலுங்கானா மாநில ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இப்ராகிம் பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 25ஆம் தேதி பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. மேலும் 34 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர்களின் 4 பெண்கள் மட்டும் இரு தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இதைதொடர்ந்து  அப்பெண்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக புகாரில் மருத்துவமனை கண்காணிப்பாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.  நான்கு பெண்களின் மரணம் குறித்து பொது சுகாதார இயக்குனர் சீனிவாச ராவ் தலைமையில் விரிவான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. பலியான பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவியும் ஒரு வீடும் வழங்கப்படும் என்று தெலுங்கானா மாநில அரசு அறிவித்தது. மேலும் மீதமுள்ள 30 பெண்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.