டாஸ்மாக் ஊழியர்களுக்கு 40 சதவீதம் தீபாவளி போனஸ்? தமிழக அரசின் பதில்!
பண்டிகை என்றாலே முக்கியமான ஒன்று தீபாவளி தான். அந்த தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அனைத்து ஊழியர்களும் போனஸ் எதிர்பார்ப்பது வழக்கம்.அந்த வகையில் டாஸ்மாக் ஊழியர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த கோரிக்கையில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்க தலைவர் பெரியசாமி மற்றும் பொதுச்செயலாளர் தனசேகரன் ஆகியோர் கூறியுள்ளதாவது.
டாஸ்மாக் நிறுவனத்தில் மேற்பார்வையாளர்கள் ,விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்கள் கடந்த 19 ஆண்டுகளாக அடிப்படைச் சம்பளத்தில் தான் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கென எந்தவித பணி பாதுகாப்பும் கிடையாது. மதுபானங்கள் விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் அதிக அளவில் வரி வருவாய் கிடைகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலை ஏற்பட்டது.ஆனால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு விடுமுறை என்பதே இல்லை.இந்நிலையில் கடந்த ஆண்டு தீபாவளியின் போது பத்து சதவீத போனஸ் மட்டுமே வழங்கப்பட்டது.ஆகையால் இந்த ஆண்டு போனஸ் அந்த பத்து சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.அந்த வகையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 40சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்கள்.