அரசு பேருந்தில் கடத்தப்பட இருந்த 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

0
149

அரசு பேருந்தில் கடத்தப்பட இருந்த 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

தேனி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் இருந்து குமுளி அரசு பேருந்தின் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவது குறித்து பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து விரைந்து வந்த பறக்கும் படையினர் குமுளி அரசு பேருந்தில் சோதனை செய்தனர்.

அப்போது அரசு பேருந்தில் 400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பறக்கும் படை துணை வட்டாட்சியர் முத்துக்குமார் தலைமையிலான குழுவினர் 400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை உத்தமபாளையத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.

Previous articleசூர்யா நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்! ரசிகர்கள் ஆர்வம்!
Next articleசரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி சென்ற மர்ம கும்பல் !.. அச்சத்தில் பொது மக்கள்!..