எங்கு பார்த்தாலும், எதில்பார்த்தாலும், யாரை கேட்டாலும் எனக்கு சர்க்கரை உள்ளது. எனக்கு சர்க்கரை அதிகமாக உள்ளது. அதை சாப்பிடக்கூடாது. இதை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர் கூறி இருக்கிறார்கள், என்று புலம்புவர்களை பார்த்திருக்கிறீர்கள்.
அதேபோல் இனிப்பை சாப்பிட முடியவில்லை, இந்த உணவு பொருளை சாப்பிட முடியவில்லை, என்று ஏங்கும் பலரையும் நாம் பார்த்திருக்கின்றோம்.
ஆனால் இனி பயப்பட வேண்டாம். இதை மட்டும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர, உங்களுக்கு இருக்கின்ற சர்க்கரைக்கு சமாதியை கட்டிவிடலாம்!
இதோ உங்களுக்கு இருக்கின்ற சர்க்கரையை சமாதி கட்டப் போகும் இந்த 5 பொருட்கள்,
தேவையான பொருட்கள்:
1. ஆவாரம் பூ 100 கிராம்
2. கருஞ்சீரகம் 100 கிராம்
3. கோரைக்கிழங்கு 100 கிராம்
4. எள்ளு புண்ணாக்கு நூறு கிராம்
5. பருத்திக்கொட்டை 100 கிராம்
செய்முறை:
1. மேலே கூறியுள்ள ஆவாரம் பூ, கருஞ்சீரகம், கோரை கிழங்கு, எள்ளு புண்ணாக்கு, பருத்திக்கொட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து வெயிலில் உணர்த்தி காய வைத்து எடுத்துக் கொள்ளவும்…
2. பின் அனைத்து பொருட்களையும் தனித்தனியாக அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
3. பின் ஒரு கண்ணாடி பாட்டிலில் அனைத்து பொடியையும் போட்டு நன்றாக கலந்து எடுத்துக் கொள்ளவும்.
4. இப்பொழுது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொள்ளவும்
5. 100 மில்லி தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும்.
6. இதில் அரை ஸ்பூன் அளவிற்கு கலந்து வைத்த பொடியை சேர்த்துக் கொள்ளவும்.
7. 100 மில்லி தண்ணீர் 50 மில்லி ஆகும் வரை நன்றாக காய்ச்சிக் கொள்ளவும்.
8. பின் இதை வடிகட்டி இதை தினமும் காலை மற்றும் இரவு உணவுக்கு முன் அரை மணி நேரம் முன்பு என 48 நாட்கள் தினமும் இதை குடிக்க வேண்டும்.
இப்படி செய்து வரும் பொழுது உங்கள் சர்க்கரைக்கு சமாதி கட்டி விடலாம்.