5 ரூபாய் போதும் 7 நாட்களில் வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பு மெழுகாய் கரையும்!

0
37

நாம் இப்பொழுது சந்திக்கக்கூடிய மிகவும் முக்கியமான பிரச்சனைகளில் உடல் பருமனும் ஒன்று. வயத்திற்கேற்ற எடை இல்லாமல் துரித உணவுகளை உண்டு உண்டு வயதிற்கு அதிகமான எடையையும் அதிகமான பி எம் ஐ என்று சொல்லுகின்ற பாடி மாஸ் இன்டெக்ஸ் சதவீதமும் அதிகமாக உள்ளது.

இப்படி இருப்பதினால் 40 வயதிற்கு மேல் கொழுப்புகள் அடைத்து, ரத்தக்குழாய் வெடித்து இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு இறக்கும் அபாயம் கூட உள்ளது.

இவ்வாறு துரித உணவுகளை உண்ணாமல் வயதிற்கு ஏற்ற தகுதியான உணவுகளை உண்டு உடல் எடையை பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இப்போது நான் கூறவிருக்கின்ற இந்த வழிமுறையை தொடர்ந்து ஏழு நாட்கள் செய்து வந்தாலே நீங்கள் மாற்றத்தை உணர முடியும்.

பொருட்கள்:

1. எலுமிச்சை பழம் -2
2. பட்டை இரண்டு
3. காபி தூள் ஒன்று
4. தேன் தேவையான அளவு

செய்முறை:

1. இரண்டு எலுமிச்சை பழத்தை எடுத்து அதில் உள்ள அனைத்து சாரையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
2. தோலை தூக்கி எறியாமல் சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
3. இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வெட்டி வைத்த எலுமிச்சை பழ தோல்களை அதில் போட்டுக் கொள்ளுங்கள்.
4. இரண்டு பட்டை சேர்த்துக் கொள்ளுங்கள்.
5. இப்பொழுது நன்றாக கொதிக்க விடவும்.
6. பின் ஒரு 2 ரூபாய் பாக்கெட் காபி பவுடரை கலந்து கொள்ளுங்கள்.
7. நன்கு கொதித்த உடன் வடிகட்டி அதை ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ளவும்.
8. இதில் பிழிந்து வைத்த எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும்.
9. சுவைக்கு ஏற்ப தேன் கலந்து கொள்ளவும்.

பானத்தை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வர, நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உங்கள் உடல் எடை குறைவதை காண முடியும்.