வாயில் கெட்ட வாடை வராமல் இருக்க உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

0
36

வாயில் கெட்ட வாடை வராமல் இருக்க உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

தினசரி வாழ்வில் வாய் துர்நாற்றத்தால் நம்மில் பெரும்பாலானோர் பேச முடியாமல் அவதிப்பட்டு வருகின்றோம்.இந்த பிரச்சனையால் பேசுவதற்கு தயக்கம் ஏற்படும் சூழல் உருவாகி விடுகின்றது.காரணம் வாயை திறந்தால் நம் அருகில் வேறொருவர் நிற்கவே முடியாத படி நாறும் என்பதினால் இந்த பிரச்சனை பற்றி வெளியில் சொல்ல முடியாமல் பலரும் இன்னல்களை சந்தித்து வருகின்றோம்.ஒரு சிலருக்கு பல் துலக்கினாலும் சரி,துலக்காவிட்டாலும் சரி இந்த பிரச்சனை அவர்களை விடாமல் துரத்துகிறது.இந்த வாய் துர்நாற்ற பாதிப்பால் தன்னம்பிக்கை குறைந்து பேசுவதை தவிர்க்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.

வாய் துர்நாற்றத்திற்கு காரணம்

வயிற்று கோளாறு,வயிற்று புண் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும்.தொண்டையில் உள்ள டான்சில் என்ற சுரப்பியில் பிரச்சனை ஏற்பட்டாலும் இவை உண்டாகும்.அதிக காரம் மற்றும் புளிப்பு சுவை நிறைந்த உணவுகளை எடுத்து கொள்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகின்றது.செரிமான கோளாறுகளாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.இவ்வாறு நெருங்கிப் பழகுபவர்கள் நம்மிடம் சொல்ல தயங்கும் இந்த பிரச்சனையை இயற்கை முறையில் சுலபமாக போக்கிவிட முடியும்.

வாயில் இருக்கும் கெட்ட வாடையை போக்க எளிய வழிகள்

* வாய் துர்நாற்றம் இருப்பவர்கள் புதினா,எலுமிச்சை ஆகியவற்றை பிழிந்து சாறாக அருந்தி வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்
*எலுமிச்சை சாற்றுடன் கல் உப்பு கலந்து வாயை நன்றாக சுத்தம் செய்து வருவதன் மூலம் இப்பிரச்சனை நீங்கும்.
*காலை,இரவு என இரு நேரமும் பல் துலக்குவது அவசியம்.இதனால் வாயில் இருக்கும் கிருமிகள் வெளியேற்றபட்டு விடும்.
*கொத்தமல்லி,சோம்பு,பட்டை,இலவங்கம்,ஏலக்காய் உள்ளிட்ட வாசனை பொருட்களை வாயில் போட்டு மென்று விழுங்க வேண்டும்.இவ்வாறு செய்வதால் வாய் துர்நாற்றம் அகலும்.
*காலையில் எழுந்தவுடன் 3லிருந்து 4 டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம் ஆகும்.

வாய் துர்நாற்றத்தை போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ரெமிடியை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

தேவையான பொருட்கள் :-

பேஸ்ட் -தேவைக்கேற்ப

இலவங்கம் – 5

சோம்பு -1 தேக்கரண்டி

மஞ்சள் -1/2 சிட்டிகை

ரோஸ் வாட்டர் -1/2 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பவுலில் தேவைக்கேற்ப தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் பேஸ்ட் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.பிறகு இலவங்கத்தை இடித்து அதில் சேர்த்து கொள்ள வேண்டும். இதையடுத்து சோம்பு,மஞ்சள் மற்றும் பன்னீர்(ரோஸ் வாட்டர்) உள்ளிட்டவற்றை சேர்த்து குறைந்தது 5 நிமிடங்கள் அவற்றை ஊறவைக்க வேண்டும்.பின்னர் அவற்றை எடுத்து வாயை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நாள்பட்ட வாய் துர்நாற்றம் விலகி வாய் மணக்கும்.