50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்களின் பெயர்கள் அறிவிப்பு!

Photo of author

By Gayathri

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்களின் பெயர்கள் அறிவிப்பு!

Gayathri

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்களின் பெயர்கள் அறிவிப்பு!

வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் போட்டி நடைறெ இருக்கிறது. இப்போட்டியில், இந்தியா, பாகிஸ்தான் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

#image_title

இந்தப் போட்டி அக்டோபர் முதல் நவம்பரை நடைபெறும். இந்தியா-நியூசிலாந்துக்கான போட்டி அக்டோபர் 5ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளன.

தற்போது, இந்திய அணி இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இலங்கையில் கனமழை பெய்து வருவதால் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உலக கோப்பை தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், உலகக்கோப்பை தொடரில் கலந்து கொள்ளப்போகும் வீரர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அணி வீரர்களின் பெயர் விவரங்கள்

ரோகித் சர்மா (கேப்டன்),
ஹர்த்திக் பாண்ட்யா (துணை கேப்டன்),
சுப்மன் கில்,
விராட் கோலி,
ஷ்ரேயாஸ் ஐயர்,
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்),
கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்),
சூர்யகுமார் யாதவ்,
அக்சர் படேல்,
ரவீந்திர ஜடேஜா,
முகமது ஷமி.
ஷர்துல் தாக்கூர்,
ஜஸ்பிரித் பும்ரா,
முகமது சிராஜ்,
குல்தீப் யாதவ்

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.