தமிழகத்தில் அடுத்து 500 மதுக்கடைகள் மூடல்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

0
225
500 bars to be closed in Tamil Nadu next! The information released by the minister!!
500 bars to be closed in Tamil Nadu next! The information released by the minister!!

தமிழகத்தில் அடுத்து 500 மதுக்கடைகள் மூடல்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

தமிழகத்தில்  500 மது கடைகள் மூடப்படும் என்று சட்ட பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அந்த மூடப்படும் கடைகள் எவை எவை என்று கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

அதற்குள்ளே அவர் அமலாக்கத்துறையால்  கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக தங்கம் தென்னரசுக்கு மின்சாரத்துறையும், முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வழங்கப்பட்டது.

இப்பொழுது மதுவிலக்கு துறை அமைச்சராக இருக்கும் முத்துசாமி தற்பொழுது தமிழகத்தில் 500 மது கடைகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு தினத்தையொட்டி பேசிய அமைச்சர் 500 மது கடைகள் மூடப்பட உள்ளதாகவும், மது கடைகளின் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் டாஸ்மார்க்கில் சில முறை கேடுகள் நடைபெறுகிறது என்றும் அதனை சரி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டதாகவும் அவர் கூறினார்.

சில இடங்களில் கள்ளச்சாரயம்  காய்ச்ச படுகிறது அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இவ்வாறு சட்ட விரோதமாக செயல்படுபவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட்டும் என்றும் தெரிவித்தார்.

மதுபான கடைகள் மூலம் பல இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். கோவில் மற்றும்  பள்ளிகள் போன்ற மிக முக்கியமான இடங்களில் உள்ள  தேவையற்ற மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்றும் பலர் கோரிக்கை வைத்தனர்.

Previous articleUTS –இன் புதிய அப்டேட்!! தெற்கு ரயில்வேயின் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!!
Next articleலிப்ட் கேட்டு லாரியில் சென்ற தொழிலாளிக்கு காத்திருந்த எமன்!! திடீரென டிரைவர் பிரேக் பிடித்ததால் நேர்ந்த சோகம்!