பாட்டிக்கு உதவி செய்ய வந்த 15 வயது சிறுமி கர்ப்பம்! 54 வயது முதியவர் அரங்கேற்றிய கொடூரம்

0
189
54 Year Old Man Sexually Abused Small Child-News4 Tamil Online Tamil News
54 Year Old Man Sexually Abused Small Child-News4 Tamil Online Tamil News

54 வயதாகும் ரியல் எஸ்டேட் அதிபர் 15 வயதாகும் சிறுமியிடம் அத்துமீறி கர்ப்பமாக்கிய சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னையின் பிரதான பகுதியான அசோக் நகரில் வசித்து வருபவர் தான் பால்ராஜ். 54 வயதாகும் இவர் ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். அவருக்கு வீட்டு வேலை செய்ய உதவியாக வீட்டில் வயதான பாட்டி ஒருவரை வேலைக்கு வைத்துள்ளார்.

இந்நிலையில் பால்ராஜ் வீட்டில் வேலை செய்யும் பாட்டியை பார்க்க 15 வயதாகும் அவரது பேத்தி அடிக்கடி வந்து பாட்டிக்கு உதவி செய்து வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமி பாட்டியுடனேயே வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்ட ரியல் எஸ்டேட் அதிபரான பால்ராஜ் கடந்த ஒரு வருடமாக அடிக்கடி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் இது பற்றி வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்று சிறுமியிடம் மிரட்டலும் விடுத்துள்ளார்.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அந்த சிறுமி உணர்ந்துள்ளார். இதனையடுத்து பதறிப்போன அந்த சிறுமி நடந்தது குறித்து தனது பாட்டியிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவருடைய பாட்டி உடனே இதைப்பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் அவர்கள் அளித்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவில் வழக்குபதிவு செய்து குற்றவாளியான பால்ராஜை கைது செய்தனர். 54 வயது முதியவரான ரியல் எஸ்டேட் அதிபரான பால்ராஜ் 15 வயது சிறுமியிடம் அத்துமீறி அவரை கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஇந்தியாவின் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் ரஜிந்தர் கோயல் காலமானார்
Next articleரூ.103 மதிப்புள்ள கொரோனா மாத்திரை பயன்படுத்த தமிழக அரசு தயக்கம்! ஏன்.. எதற்காக.?