பல நூறு கோடி மதிப்பு கொண்ட 55 தொன்மையான சிலைகள் பறிமுதல்! 

0
204
#image_title

பல நூறு கோடி மதிப்பு கொண்ட 55 தொன்மையான சிலைகள் பறிமுதல்! 

அமெரிக்காவில் பணிபுரியும் பெண் மென் பொறியாளர் ஹாபியாக உரிய ஆவணங்கள் இன்றி சிலைகளை வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரபல சர்வதேச குற்றவாளியும் சிலை கடத்தல் மன்னனுமான உயிரிழந்த தீனதயாளிடமிருந்து சிலைகளை வாங்கிய பெண் பொறியாளருக்கு போலீசார் வலைவீச்சு.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு வீட்டில் தொன்மையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேரில் சென்று சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் 55 பழங்கால தொன்மையான சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

வீட்டின் உரிமையாளர்களான ஷோபா மற்றும் அவரது கணவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் கம்பெனியில் மென் பொறியாளர்களாக பணிபுரிந்து வருவது தெரியவந்தது. புராதான பொருட்களை சேகரிப்பது அவருக்கு ஒரு ஹாபியாக இருந்து வந்துள்ளது இதன் காரணமாக வீட்டில் ஏராளமான பழமையான சிலைகள் ஆகியவற்றை சேர்த்து வைத்ததும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக 76 சென்டிமீட்டர் நீளம் கொண்ட இந்திராணி சிலை, 76 சென்டிமீட்டர் நீளம் கொண்ட வாராஹி அம்மன் சிலை, 97 மீட்டர் வீரம் கொண்ட வீரபத்திரர் சிலை, 89 சென்டிமீட்டர் நீளம் கொண்ட தட்சிணாமூர்த்தி சிலை, 76 சென்டிமீட்டர் நீளம் கொண்ட கிராம தேவதை சிலை, 80 சென்டிமீட்டர் நீளம் கொண்ட சாமுண்டா சிலை, 74 சென்டிமீட்டர் உயரம் கொண்ட அனுமன் கற்சிலை, 24 மீட்டர் நீளம் கொண்ட வைஷ்ணவி கற்சிலை, 66 சென்டிமீட்டர் நீளம் கொண்ட விஷ்ணு கற்சிலை, 60 சென்டிமீட்டர் நீளம் கொண்ட துர்கா சிலை, 65 சென்டிமீட்டர் நீளம் கொண்ட கருடா கற்சிலை, 70 சென்டிமீட்டர் நீளம் கொண்ட விஷ்ணு சிலை, 67 சென்டிமீட்டர் நீளம் கொண்ட கணபதி கற்சிலை, 24 சென்டிமீட்டர் நீளம் கொண்ட பிரம்மா கற்சிலை, நவ கிரக சிலைகள் உட்பட 55 சிலைகள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவற்றுள் பல சிலைகள் உயிரிழந்த பிரபல சிலை கடத்தல் மன்னனும், சர்வதேச குற்றவாளியான தீனதயாளனிடமிருந்து ஷோபா 2010 – 2011 காலகட்டத்தில் வாங்கி இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சர்வதேச குற்றவாளியான தீன தயாளனிடமிருந்து ஏற்கனவே வாங்கிய பல்வேறு சிலைகள் வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றதும் தற்போதுள்ள பல சிலைகளை உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சி செய்திருக்கிறாரா என்று கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஷோபாவிடம் பழங்கால சிலைகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில ஐம்பொன உட்பட 17 சிலைகளை அவரிடம் இருந்து மீட்டனர். அதில் மூன்று சிலைகள் உளுந்தூர்பேட்டையில் உள்ள கோவிலுக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் தற்போது 55 தொன்மையான கற்சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்து, பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாடு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு 1000 வருடத்திற்கு முந்தை பல நூறுகோடி மதிப்புக்கொண்ட 55 சிலைகளை மீட்டுள்ளனர். முக்கியமாக அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து திருடப்பட்ட உலோக அனுமன் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் இவைகள் அனைத்தும் கோவில்களில் இருந்து திருடப்பட்டவை எனவும் தமிழகம், வட இந்திய கோவில்களில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் எனமும் தெரிவித்தார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பாக தமிழகத்தில் 301 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவற்றுள் 101 வழக்குகள் கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் உள்ளதாகவும், குறிப்பாக 1983 அம் ஆண்டிலிருந்து 576 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்து மிக சிறப்பான முறையில் சிலைகளை மீட்டு கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். 1983 ஆம் ஆண்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சில ஆயிரம் சிலைகளில் நூற்றுக்கணக்கான சிலைகளை உரிய கோவில்களில் ஒப்படைத்துள்ளதாகவும் இன்னும் 1,541 பழமையான சிலைகள் கைவசம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அவற்றுள் தற்போது வரை 249 சிலைகள் 3D பரிணாமத்தில் பொதுமக்கள் பார்வைக்காக இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள சிலைகளை 3D பரிணாமத்தில் பதிவேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில்தான் சிறப்பான பழமை வாய்ந்த 307 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவைகள் உரிய கோவில்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

“வெளிநாடுகளில் இருந்து சிலைகளை மீட்கும் குழு” அமைக்கப்பட்ட பிறகு வெளிநாடு வாழ் இந்தியர்கள் உதவியால் இதுவரை 64 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது கைப்பற்றப்பட்டுள்ள 55 சிலைகள் தொடர்பாக சோபாவை கைது செய்வதற்கான முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Previous articleபுதுச்சேரியில் முதல் முறையாக ஆதிபுஷ்கரணி விழா தொடங்கியது!
Next articleஅண்ணாமலை வெளியிட்ட திமுக ஊழல் பட்டியல்!! தமிழக பரபரப்பு பேச்சு!!