அண்ணாமலை வெளியிட்ட திமுக ஊழல் பட்டியல்!! தமிழக பரபரப்பு பேச்சு!!

0
146
#image_title

பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக உடைய ஊழல்,சொத்து சேர்ப்பது, விவகாரத்தைப் பற்றி தான் தமிழக மக்கள் பிரபலமாக பேசி வருகிறார்கள், அதை திசை திருப்புவதற்காக தான் திமுக அரசு இதுபோன்ற தீர்மானங்களை கொண்டு வருகிறார்கள்.

12 மணி நேரம் வேலை என்பது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, யாருடைய கோரிக்கையும் இல்லாமல் இவர்களாக நேரத்தை உயர்த்தி இருப்பது, நிகழ்ச்சிகளையும், பிரச்சனைகளையும், திசை திருப்புவதற்காக தான் திமுக அரசு இது போன்று செய்கிறது என பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் காஞ்சிபுரத்தில் பேட்டி.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் உத்திரமேரூர் பாஜக சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் கே எஸ் பாபு தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது ‌.

இதில் பாஜக மாநில துணைத்தலைவரும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற பொறுப்பாளருமான கரு. நாகராஜன் கலந்துகொண்டு நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி , புதிய உறுப்பினர் சேர்க்கை, வாக்கு சாவடி வாரியாக வாக்குகளை கவரும் வகையில் கூட்டம் நடத்துவது மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றுவதல் உள்ளிடவைகள் குறித்து சக்தி கேந்திரா பொறுப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள் 12 பேர் மீது வலுவான குற்றச்சாட்டு பொய் லஞ்சம் ஊழல் மக்களை ஏமாற்றுதல் மக்களை திசை திருப்புதல் மோசடி செய்தல் போன்ற பல வகையான குற்றச்சாட்டுகளை சொல்லியிருக்கிறார்.

அந்த குற்றச்சாட்டுகள் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமாக பேசப்படுவது திமுக உடைய ஊழல் சொத்து சேர்ப்பது விவகாரத்தை பற்றி தான் அதை திசை திருப்புவதற்காக தான் இதுபோன்ற தீர்மானங்களை கொண்டு வருகிறார்கள் 12 மணி நேரம் வேலை என்பது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

எல்லாருக்குமே தெரியும் ஆனால் இவர்களே சொல்கிறார்கள் 12 மணி நேரம் வேலை பார்த்தால் நான்கு நாள் 12 மணி நேரம் வேலை பார்த்தால் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள். வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்தால் நான்காவது நாள் வேலைக்கு வருவார்களா என்பதே சொல்ல முடியாது.

சனி ஞாயிறு இரண்டு நாள் விடுப்பு எடுத்தாலே திங்கட்கிழமை வேலைக்கு கிளம்புவது மக்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. மூன்று நாள் விடுப்பு என்று சொன்னால் மூன்று நாள் விடுப்போட சனி ஞாயிறு வந்து விழாக்கால பண்டிகையும் வந்தால் நிறைய உற்பத்தி பாதிக்கும் தொழில் பாதிக்கும்.

இவையெல்லாம் தெரிந்தும் தேவையே இல்லாமல் இந்த மாதிரி அவசியம் இல்லாமல் எந்த ஒரு தொழிலாளியும் எந்த பிரிவு தனியார்களோ அரசு தொழிலாளர்களோ யாருடைய கோரிக்கையும் இல்லாமல் இவர்களாக நேரத்தை உயர்த்தி இருப்பது நாளைக்கு நேரத்தை குறைக்கலாம்.

மறுபடியும் எட்டு மணி நேரம் மக்களுடைய தேவைகள் மக்களுடைய கோரிக்கைகளை ஏற்று மாற்றிக் கொண்டோம் என்று நிகழ்ச்சிகளையும் பிரச்சனைகளையும் திசை திருப்புவதற்காக திமுக அரசு இதுபோன்று செய்கிறது இது தவறான போக்கு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

சித்ரா பௌர்ணமி அன்று தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பண்பாடு கலாச்சாரத்தை மறந்து கொண்டு வருகிறோம், அதை மக்களுக்கு மீண்டும் நினைவூட்டும் மிதமாக முற்கால மட்டுமல்ல,20, 25, ஆண்டுகளுக்கு முன்பு கூட சித்ரா பௌர்ணமி என்பது எல்லோரும் கிராம மக்கள், தெருமக்கள், ஊர் மக்கள், ஒன்று கூடி சித்ரா பௌர்ணமி விழா ஜாதிமத வேறுபாடுகள் இல்லாமல் கொண்டாடிய காட்சிகள் எல்லாம் நாம் பார்த்தோம். அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மறைகிறது.

அதை மறுபடியும் புதுப்பிக்கின்ற வகையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி சித்ரா பௌர்ணமி விழாவை குடும்ப விழாவாக எங்களது கட்சி நிர்வாகிகளோடு சேர்ந்து அந்த பகுதிகளில் இருக்கின்ற பொதுமக்களையும் தாய்மார்களையும் அழைத்து சித்ரா பௌர்ணமி விழா கொண்டாட வேண்டும் என்று அதற்கான திட்டமும் பேசப்பட்டு கொண்டிருக்கிறது.

வருகிற மே 15 முதல் ஜூன் 15 வரை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய ஒன்பது ஆண்டு கால ஆட்சி நிறைவு வருகிறது அதை ஒட்டி இந்த ஆட்சி நடைபெற்ற சாதனைகள் எல்லாம் மக்களுக்கு எடுத்து உரைக்கின்ற கூட்டங்களும் நடைபெற இருக்கின்றது என்பதை இங்கே விளக்கி பேசிக் கொண்டிருக்கிறோம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் குருமூர்த்தி, ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவர் அதிசயம் குமார், கூரம் விஸ்வநாதன், ஜீவானந்தம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

author avatar
Savitha