தமிழ்நாட்டின் மாபெரும் வர்த்தக மையமாக இருந்த தனுஷ் கோடி ஆழிப்பேரலையால் அழிந்த சம்பவம் முடிந்து இன்றுடன் 59 ஆண்டுகள் நிறைவடைகிறது.
தமிழகத்தில் இரு கடல்கள் இணையும் சங்கமாக இருப்பது தனுஷ்கோடி. அப்படி இங்கிருந்து இலங்கை மிகவும் அருகில் உள்ளதால் வர்த்தகங்களை உருவாக்க நினைத்தனர் அந்த காலத்தில் பிரிட்டிஷ்காரர்கள். 1914 ஆம் ஆண்டு தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைநகரத்திற்கும் போக்குவரத்து ஏற்பட்டது.
அதிகமான சரக்குகள் இருப்பதால் சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் மூலம் சரக்குகள் கொண்டுவரப்பட்டு இரு கப்பல்களில் இலங்கைக்கு செல்லுமாறு தொடங்கப்பட்டது.
இதனால் தனுஷ்கோடி ஒரு மாபெரும் வர்த்தக துறைமுகமாக மாறியது.
இலங்கையின் பணத்தை மாற்றிக் கொள்வதற்கு மக்களுக்கு அலுவலகங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள், வர்த்தக கட்டிடங்கள், இரயில் நிலையங்கள் என குட்டி சிங்கப்பூர் என்று அழைக்கும் அளவிற்கு தனுஷ்கோடி மாபெரும் வர்த்தக மையமாக அப்பொழுது இருந்தது. ஆனால் அதன் பின்னர் அது அப்படியே கடலுக்குள் செல்லும் என்பதை யாரும் அறியாத ஒன்று.
1964ஆம் ஆண்டு மாபெரும் மழை அதிக அளவில் டிசம்பர் 23ஆம் தேதி பெய்தத. இரவு பெய்த கனமழையால் பலத்த சூறைக்காற்று வீசி தனுஷ்கோடியை தாக்கியது. ஆழிபேரலை தாக்கியது.
தூங்கிக் கொண்டிருந்த மக்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இருந்த அலுவலகங்கள் வீடுகள் ஆகியவை இடிந்து சேதமாகின. இரண்டு கிலோமீட்டர் வரை தனுஷ்கோடி கடலுக்குள் சென்றது.
பாம்பன் பாலத்தில் வந்த ரயில் சிக்னல் இல்லாமல் நின்று போய் அடித்த சூறைக்காற்று பயணிகளை அப்படியே அடித்துக் கொண்டு போய் கடலில் வீசியது. ஏராளமான பேர் உயிரிழந்தனர்.
பாம்பன் பாலத்தில் உள்ள 8 கா்டா்களை புயல் தாக்கி வீசியது. அடுத்த நாள் பார்த்தால் ஆங்காங்கே சிறு சிறு குளங்கள் போல தண்ணீர் தேங்கி கிடந்ததும், இறந்து போன மக்கள் அங்கங்கே சிதறிப் போய் இருந்தன, எங்கும் அழுகைகள் ஓலங்கள் என தனுஷ்கோடியே ஒன்றுமில்லாமல் போய்விட்டது.
அப்படி அந்த காலத்தின் தனுஷ்கோடியின் வர்த்தக மையங்களின் கட்டிடங்கள் இப்பொழுது பார்த்தாலும் அங்கே இருக்கின்றன. இடிந்து போன கட்டடங்கள் மற்றும் புயலால் அடித்துச் செல்லப்பட்டு மீதமிருக்கும் ரயில் பாதை ஆகிய அனைத்தையும் இன்றும் நம்மால் காண முடிகிறது.
தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அன்று நடந்த வர்த்தக மையங்களின் கட்டிடங்களை பார்த்து செல்கின்றனர்.
மீண்டும் தனுஷ்கோடியை புதுப்பிப்பதற்காக பல்வேறு பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.