இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

0
110
5th August is a local holiday for this district!! Important announcement issued by the District Collector!!
5th August is a local holiday for this district!! Important announcement issued by the District Collector!!

இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

புகழ்பெற்ற ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற பனிமயமாதா பேராலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி வரை நடைபெறும். இந்த திருவிழாவிற்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இதனால் அங்கு மிகுந்த கூட்ட நெரிசல் காணப்படும்.

இதையடுத்து உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 441-வது ஆண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் நீலநிறத்தில் உடை அணிந்து கலந்து கொண்டனர். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தங்கத்தேர் பவனி வருதல் ஆகும். இந்த தங்கத்தேர் பவனி வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.

எனவே பனி மயமாதா பேராலயத்தின் தேரோட்டத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறை அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் பொருந்தாது என்ன மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Previous articleநீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!!  பரிசல்  இயக்க தடைவிதித்த மாவட்ட நிர்வாகம்!! 
Next articleஇவருக்கு நான் தீவிர ரசிகனாகிவிட்டேன்!! சமுத்திரக்கனியை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்!!