ஓமம் தண்ணீர் குடிப்பதால் ஓடிப்போகும் 6 விதமான நோய்கள்!

Photo of author

By Kowsalya

ஓமம் தண்ணீர் குடிப்பதால் ஓடிப்போகும் 6 விதமான நோய்கள்!

ஓமம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது மிகுந்த வாசனையாகவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழமையான காலத்தில் இதை கடைபிடித்து வந்துள்ளனர். இப்பொழுது நாம் எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியாமல் வருகிறது.
மேலும் ஓமம் தண்ணீரை குடித்தாள்ல் 6 விதமான நோய்களில் இருந்து விடுபடலாம்.

1. உடல் பலம் பெற:

ஒரு சிலர் மிகவும் ஒல்லியாக காணப்படுவார்கள். அவர்கள் எந்த சத்துக்கள் இருக்காது.மேலும் ஒரு சிலர் மிகுந்த பலசாலியாக காணப்படுவார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அவர்களால் மூச்சுவிட முடியாது. இவ்வாறு பலம் இழந்து காணப்படுவார்கள். அதற்கு ஓமத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீருடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் குடித்து வந்தால் உடல் பலம் பெறும்.

2.வயிற்றுப் பொருமல் நீங்க

சிறு குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல்,அஜீரணம், வயிற்று வலி ஆகியவை வந்து கொண்டுதான் இருக்கின்றன.ஓமம் அதற்கு ஒரு நல்ல தீர்வாக அமையும்.100 கிராம் ஓமத்தை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அரை லிட்டர் ஆனதும் அந்த தண்ணீரை காலையிலும் மாலையிலும் குடித்து வர வயிற்றுப் பொருமல் நீங்கும்.மேலும் ஓமம் மற்றும் மிளகு சமமாக 35 கிராம் எடுத்துக்கொண்டு இடித்து பொடியாக்கி அதனுடன் பனைவெல்லம் சேர்த்து பொடி செய்து காலையிலும் மாலையிலும் 5 கிராம் எடுத்து உண்டுவர கழிச்சல் மற்றும் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

3.புகைச்சல் இருமல் நீங்க:

ஒரு சிலருக்கு இரவு படுத்து தூங்கும் பொழுது புகைச்சல் இருமல் வரும் அதாவது வறட்டு இருமல் போல இருக்கும் இரவெல்லாம் இருமிக் கொண்டே இருப்பார்கள்.இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் ஆகியவற்றை எடுத்து வைத்து பொடியாக்கி கொண்டு சரிபாதி அளவு பனை கற்கண்டு சேர்த்து காலையிலும் ,மாலையிலும் உண்டு வந்தால் வறட்டு இருமல் என்கின்ற புகைச்சல் இருமல் நீங்கும்.

4. மந்தம் நீங்க:

பொதுவாக சிறு குழந்தைகள் அதிகமாக மந்த நிலையில் காணப்படுபவர்கள் அஜீரணக் கோளாறு , உடல் சோர்ந்து காணப்படும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து இடித்து காலையிலும் மாலையிலும் மோரில் கலந்து குடித்து வர குழந்தைகளுக்கு மந்தம் என்பதே இல்லாமல் போய்விடும்.

5.பசியைத் தூண்ட:

ஒரு சிலருக்கு பசிக்கவே பசிக்காது மற்றும் தூக்கமும் வராது. பசியின்மையும் தூக்கமின்மையும் இருந்தால் ஒருவரது உடல் ஆரோக்கியம் அற்றதாக கருதப்படுகிறது.இவ்வாறு பசியின்மையும் தூக்கமின்மை இருந்தால் உடலில் நோய்கள் கூடாரம் போட்டு தங்கி விடுமாம்.எனவே ஓமத்தை கசாயம் போல செய்து குடித்து வந்தால் பசியை தூண்டி தூக்கத்தை வரவழைக்கும்.

6.இடுப்பு வலி நீங்க:

சிறிதளவு தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு நன்கு கொதிக்க விடவும். கொதித்ததும் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மறுபடியும் கொதிக்க வைக்கவும். பிறகு அதை வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டிய எண்ணெயுடன் கற்பூர பொடியை சேர்த்துக் கலக்கிக் கொள்ளுங்கள். இளஞ்சூடான அந்த எண்ணெயை எங்கு வலி இருக்கிறதோ அங்கு வைத்து நன்றாக தேய்த்து விடுங்கள் இடுப்பு வலி விரைவில் மறையும்.