முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களின் பட்டியலில் இடம்பிடித்த 6 பிரபலங்கள்!!

முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களின் பட்டியலில் இடம்பிடித்த 6 பிரபலங்கள்!!

திரைப்படமானது பெரும்பாலும் பொழுதுபோக்கிற்காக எடுக்கப்படும் ஒன்று. இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள்,என அனைவருக்கும் மக்களிடையே ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளின் முதல் படங்கள் ஒரு சிலருக்கு கை கொடுப்பதில்லை. அதை தொடர்ந்து ஒரு சிலருக்கு அவர்களது முதல் படமே மக்களால் கொண்டாடப்பட்டு, மக்களிடையே அவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி விடும்.

அவ்வாறே தனது முதல் படத்திலேயே மக்கள் மனதை கவரும் வகையில் நடித்த ஆறு நடிகர்களின் வரிசை பட்டியல்கள்

நடிகர் கார்த்தி:

நடிகர் கார்த்தியின் முதல் படம் பருத்திவீரன் ஆகும்.இந்தத் திரைப்படமானது கிராமத்து அடிப்படையில் எடுக்கப்பட்ட படமாகும். இதில் இவருக்கு ஜோடியாக பிரியாமணி நடித்திருந்தார் .

முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களின் பட்டியலில் இடம்பிடித்த 6 பிரபலங்கள்!!

இப்படத்தின் காதல் பாடல்கள் என அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல் இப்படத்தில் நடிகர் கார்த்தி அவர்கள், அவரது சிறப்பு நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். இவரது நடிப்பினையும், படத்தையும் மக்கள் பாராட்டினர். எனவே இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு கை கொடுக்கும் வகையில் அமைந்ததை தொடர்ந்து, இவர் இன்றும் பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டுள்ளார்.

நடிகர் விக்ரம் பிரபு:

நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் சிவாஜி கணேசனின் பேரனும்,நடிகர் பிரபு அவர்களின் மகனான விக்ரம் பிரபு அவர்கள், நடித்த முதல் திரைப்படம் கும்கி ஆகும்.

முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களின் பட்டியலில் இடம்பிடித்த 6 பிரபலங்கள்!!

இத்திரைப்படம் யானையினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதைகளம் ஆகும். இதில் இவருக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்திருந்தார். யானையினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படமாக இது திகழ்ந்ததால் மக்களிடையே சிறப்பு வரவேற்பை பெற்று விளங்கியது.

எனவே விக்ரம் பிரபு இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இன்றும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி:

நடிகர் ஜெயம் ரவி நடித்த முதல் திரைப்படம் ஜெயம் ஆகும். இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் ஜெயம் ரவியின் அண்ணனான மோகன் ரவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக சதா அவர்கள் நடித்திருப்பார்.

முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களின் பட்டியலில் இடம்பிடித்த 6 பிரபலங்கள்!!

இந்தத் திரைப்படம் முற்றிலும் காதல், காமெடி, மற்றும் ஆக்சன்,திரைப்படமாக அமைந்திருந்தது. இது காதல் சம்பந்தப்பட்ட காட்சிகளை கொண்டு உள்ளதால், இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று, நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த அடுத்த படங்களுக்கு ஊன்றுகோலாக திகழ்ந்தது.

நடிகர் மாதவன்:

நடிகர் மாதவன் நடித்து வெளியான முதல் திரைப்படம் மின்னலே ஆகும். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரீமாசென் அவர்கள் நடித்திருப்பார். இந்தத் திரைப்படம் ஆனது முற்றிலும் காதல் மற்றும் ரொமாண்டிக், சம்பந்தப்பட்ட படமாக திகழ்ந்தது. இந்தத் திரைப்படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களின் பட்டியலில் இடம்பிடித்த 6 பிரபலங்கள்!!

அதனைத் தொடர்ந்து நடிகர் மாதவன் நடித்த அக்காலகட்ட படங்கள் அனைத்தும் ரொமான்டிக்,மற்றும் காதல் சம்பந்தப்பட்ட திரைப்படமாகவே திகழ்ந்தது. நடிகர் மாதவன் அக்காலகட்டங்களில் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்தார்.

நடிகர் அப்பாஸ்:

நடிகர் அப்பாஸ் நடித்து வெளியான முதல் திரைப்படம் காதல் தேசம் ஆகும். இந்தத் திரைப்படமானது இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தந்தது. இப்படத்தின் மூலம் அவர் சாக்லேட் பாயாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதிலும் குறிப்பாக அதிகமான பெண்கள், இவரது ரசிகர்களாக திகழ்ந்தார்கள்.

முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களின் பட்டியலில் இடம்பிடித்த 6 பிரபலங்கள்!!

இந்த காதல் தேசம் திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து.தனக்கென ஒரு தனி அடையாளத்தை நிலைநிறுத்திக் கொண்டவர் இவர்.

நடிகர் பிரசாந்த்:

நடிகர் மற்றும் இயக்குனர் தியாகராஜன், அவர்களின் மகனான பிரசாந்த் அவர்கள் நடித்த முதல் திரைப்படம் வைகாசி பொறந்தாச்சு. இதில் இவருக்கு ஜோடியாக சபா நடித்திருந்தார். இந்தப் படம் வர்த்தக ரீதியிலும் அதிக வசூல்களைப் பெற்றது.

முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களின் பட்டியலில் இடம்பிடித்த 6 பிரபலங்கள்!!

இப்படம் இந்தி மொழியிலும் வெளியிடப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் பிரசாந்த் நடித்த படங்கள் அனைத்துமே மக்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்க செய்தது.