திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம்!! நாடகமாடிய கணவர் அதிரடி கைது!! 

Photo of author

By Amutha

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம்!! நாடகமாடிய கணவர் அதிரடி கைது!! 

Amutha

6 months of marriage tragedy happened to the newlywed!! Dramatic husband arrested!!

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம்!! நாடகமாடிய கணவர் அதிரடி கைது!! 

திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரை ஏமாற்றி உள்ளார்.

இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்று உள்ளது. மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு எச்.ஆர்.பி.ஆர் லே அவுட் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த சித்தப்பா பசவராஜ் என்பவர் வசித்து வந்திருக்கிறார். இவரது மனைவி கெஞ்சம்மா. இந்த தம்பதியினருக்கு திருமணம் ஆகி ஆறு மாதங்கள் தான் ஆகின்றது.

பசவ ராஜ் வீட்டு எரிவாயு சிலிண்டர்களை சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கெஞ்சம்மா அருகில் இருக்கும் வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் நேற்று கெஞ்சமா தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டில் சடலமாக கிடந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கெஞ்சம்மா உடலை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது கணவர் பசவராஜ் தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதில் சந்தேகம் அடைந்த போலீசார் மேலும் விசாரணையை தீவிர படுத்தியதில், பசவராஜ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததாகவும் அப்போது ஏற்பட்ட தகராறு ஏற்பட்டதில்  கெஞ்சமாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து பசவராஜை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.