News

பேருந்து நிலையத்தில் நின்றவர்கள் மீது மோதிய லாரி.. 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

பேருந்திற்காக காத்திருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

மத்தியபிரதேசத்தின் ரத்லம் மாவட்டம் சத்ருண்டா கிராமத்தில் பேருந்துக்காக மக்கள் காத்திருந்தனர். அப்போது அந்த பகுதியில் அதிவேகமாக லாரி ஒன்று வந்தது.தீடிரென கட்டுபாட்டை இழந்த அந்த லாரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மோத சென்றது.

அங்கிருந்தவர்கள் தப்பி செல்ல முயன்ற போது சுமார் 20 பேர் மீது லாரி மோதியது.இதில், பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்ட நிலையில் சிலர் லாரி சக்கரத்தில் சிக்கி பலியானர். இதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய லாரி ஒட்டுநரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment