முககவசம் அணியாதவர்களிடமிருந்து 60 ஆயிரம் ரூபாய் வசூல்!சென்னை மாநகராட்சி!

0
159
60 thousand rupees collected from people who do not wear masks! Chennai Corporation!
60 thousand rupees collected from people who do not wear masks! Chennai Corporation!

முககவசம் அணியாதவர்களிடமிருந்து 60 ஆயிரம் ரூபாய் வசூல்!சென்னை மாநகராட்சி!

தமிழகத்தில் தொடர்ந்து நோய் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தமிழக அரசு முககவசம் அணிவது, சமூக இடைவேளையை பின்பற்றுவது, உள்ளிட்ட நெறிமுறைகளை கட்டாயமாக்கியுள்ளது. மேலும் முககவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்  சென்னை நகர மக்கள் முககவசம் அணியாமல் சென்று வருகின்றார்கள்.

இதன் காரணமாக, சென்னை மக்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சியின் சார்பாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. முககவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கும் நடைமுறையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்  சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முககவசம் அணியாவிட்டால் நேற்று முதல் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி உத்தரவிட்டிருக்கிறது. மேலும் வணிகவளாகங்கள் ,திரையரங்குகள் சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவித்திருந்த நிலையில் நேற்று சென்னையில் முககவசம் அணியாதவர்களிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Previous articleஐயோ!!.அடுத்த அதிர்ச்சி? இப்போ வரும் காய்ச்சல் என்னான்னே தெரியல?பீதியில் பொதுமக்கள்?!..
Next articleTET தேர்வு எழுதுவர்களுக்கு முக்கிய வெளியிட்ட அறிவிப்பு! அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!