சீனாவில் 600 இந்தியர்கள்:சமூகவலைதளங்களில் கோரிக்கை!தனி விமானம அனுப்பும் இந்திய அரசு!
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பீதி அதிகமாகி வரும் நிலையில் அங்குள்ள 600 இந்தியர்களை தனி விமானம் மூலம் இந்தியா கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சீனாவில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது. இதையடுத்து தங்கள் நாடுகளில் பரவாமல் இருக்க பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை சீனாவில் 213 க்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்குதலால் இறந்து விட்டனர். 9000க்கும் மேற்பட்டோர் பாதிகப்பட்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க சீன மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்குதல் அபாயமுள்ள பட்டியலில் இருக்கும் இந்தியா கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு வகையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே போல தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை விமான நிலையதில் சீனாவில் இருந்து வரும் பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் நவின கருவிகள் மூலம் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். இதையடுத்து சீனாவுக்கான விமானப் பயணத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
சீனாவில் 600 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக தங்கி வருகின்றனர். அவர்கள் அனைவரும் சமூகவலைதளங்களின் மூலம் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து மத்திய அரசு தனி விமானம் மூலம் அவர்களை இந்தியாவுக்குக் கொண்டுவர முடிவெடுத்துள்ளது. இதற்காக போயிங் 747 ரக விமானத்தை மத்திய அரசு நேற்று சீனாவுக்கு அனுப்பியது.
சீனாவில் இருந்து வெளியேற அனுமதி அளிக்கப்பட்ட முதல் 400 பேரை இன்று அதிகாலை இந்தியா கொண்டு வரப் படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தி பட வைக்கப்பட உள்ளனர். அதற்காக டெல்லி மனேசர் பகுதியில் உள்ளசிறப்பு மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவர். கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.