6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வந்த இன்பச்செய்தி!
கொரோனா காரணத்தினால் ஓர் வருட காலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் பயின்று வந்தனர்.அரசு அறிவிப்பின் படி சில தகவுர்கள் வந்த நிலையில் 9,10,11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் பள்ளிக்குச் சென்று பாடம் படித்து வருகின்றனர்.
9,10,11 மற்றும் 12 வகுப்பிற்கான பாடத்திட்டங்கள் கொரோனா காரணத்தினால் குறைந்த அளவு பாடத்திட்டமாக மாற்றி பள்ளி கல்வித்துறை அறிவித்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தி வருகின்றனர்.அதுபோல இப்பொழுது 6,7,8 பயிலும் மாணவர்களுக்கும் மூன்றாம் பருவநிலை பாடத் திட்டத்தை குறைத்து, பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.
இதனால் மாணவர்களுக்கு குறைந்த அளவு பாடங்கள் கற்பிப்பது போதுமானது ஆகும்.9,10,11,மற்றும் 12வகுப்பிற்கு நடந்ததை போலவே ,இந்த வகுப்புக்கும் பாடங்களை குறைத்ததால் பள்ளிகள் திறக்க அதிக அளவு வாய்புகள் உள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.