கொரோனா வைரஸ் அபாயம் உள்ள நாடுகள்:பட்டியலில் இந்தியா!

0
139

கொரோனா வைரஸ் அபாயம் உள்ள நாடுகள்:பட்டியலில் இந்தியா!

கொரோனா வைரஸ் அதிகமாக தாக்க வாய்ப்புள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒரு நாடாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது . பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை சீனாவில் 130 க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர். 4,417 மேற்பட்டோர் பாதிகப்பட்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க சீன மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருகின்றனர்.

இந்தியா சுகாதாரத்துறை கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு வகையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே போல தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை விமான நிலையதில் சீனாவில் இருந்து வரும் பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் நவின கருவிகள் மூலம் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் உள்ள நாடுகள் என்ற பட்டியலை இங்கிலாந்தில் உள்ள சவுத் ஆம்டன் என்ற பல்கலைக்கழக ஆய்வு செய்துள்ளது. அதில் சீனா விமானம் மூலம் தொடர்பு கொள்ளும் நாடுகளின் பட்டியலை வைத்து இந்த முடிவை வெளியிட்டுள்ளது. இதில் தாய்லாந்து முதல் இடத்திலும் ஜப்பான், ஹாங்காங் ஆகிய நாடுகள் அடுத்த இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 23 ஆம் இடத்தில் உள்ளது. இதனால் சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப் படுகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் இது போல சோதித்ததில் சந்தேகத்துக்கு இடமான 68 பேரை கண்காணிப்பில் வைத்துள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Previous articleபிரபல குணசித்திர நடிகர் டிஎஸ் ராகவேந்திரா காலமானார்
Next articleபாஜக பிரமுகரை எதிர்த்து போட்டியிடும் பாடகி சின்மயி: பெரும் பரபரப்பு