6வது முறை சென்னையில் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி! பிப்ரவரி 4ம் தேதி தொடக்கம்!
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சார்பில் நடத்தப்பட்டு வரும் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் போட்டி 6வது முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது. மேலும் பிப்ரவரி 4ம் தேதி தொடங்கும் இந்த டென்னிஸ் தொடர் பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பாக சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் 100 ஆடவர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த முறை சென்னையில் நடத்தபடுகின்றது. சென்னையில் 6வது முறையாக சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெறவுள்ளது.
இந்த முறை நடைபெறும் இந்த டென்னிஸ் தொடரில் 14 நாடுகளை சேர்ந்த டென்னிஸ் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த தொடரில் 117வது இடத்தில் இருக்கும் இத்தாலி வீரர் லுகா நார்டி, 137வது இடத்தில் உள்ள இந்தியாவை சேர்ந்த சுமித் நாகல், 165வது இடத்தில் உள்ள செக்குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்வர்சினா டாலிபோர், 168வது இடத்தில் உள்ள உக்ரைன் நாட்டை சேர்ந்த விட்டலி சச்கோவ், 196வது இடத்தில் உள்ள இத்தாலியை சேர்ந்த ஸ்டெபானோ டிரவக்லியா உள்பட பல டென்னிஸ் வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தியாவை சேர்ந்த முகுந்த் சசிகுமார், சித்தார்த் விஸ்வகர்மா, மணீஷ் சுரேஷ்குமார் ஆகியோரும் இந்த டென்னிஸ் தொடரில் பங்கேற்கின்றனர். மேலும் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ள ராம்குமார் ராமநாதன், செக் குடியரசு நாட்டை சேர்ந்த நிகோலோஸ் பாஷில்லாஷ்விலி ஆகியோருக்கு வைல்டு கார்டு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 4ம் தேதி தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. மேலும் தகுதிச் சுற்று ஆட்டங்கள் தொடர்ந்து பிப்ரவரி 5ம் தேதி பிரதான சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 10ம் தேதி இரட்டையர் பிரிவு இறுதி போட்டி நடைபெறவுள்ளது. மேலும் பிப்ரவரி 11ம் தேதி ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது. இந்த டென்னிஸ் தொடரின் மொத்த பரிசுத் தொகை 1.10 கோடி ஆகும்.