வடிவேலு காமெடி பாணியில் 7 வது திருமணம் செய்த பெண்! இறுதியில் நடந்த சுவாரசிய சம்பவம்

0
194

வடிவேலு காமெடி பாணியில் 7 வது திருமணம் செய்த பெண்! இறுதியில் நடந்த சுவாரசிய சம்பவம்

ஆறு ஆண்களை திருமணம் செய்துகொண்ட பின் 7 வது திருமணம் செய்ய முயன்ற பெண் வசமாக சிக்கிய சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

இவ்வாறு செய்த ஒவ்வொரு திருமணத்தின் போதும் திருமணம் செய்து கொண்டவர்களிடமிருந்து அனைத்தையும் திருடிக் கொண்டு எஸ்கேப் ஆன இந்த பெண்ணையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் ஆறாவது கணவன் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ள சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே கள்ளிப்பாளையத்தை சேர்ந்த தனபால் ( 35) என்பவர் தனக்கு திருமணம் செய்ய வரன் பார்த்து வந்துள்ளார்.அந்த வகையில் மதுரையைச் சேர்ந்த சந்தியா( 26) என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.இதனையடுத்து கடந்த 7 ஆம் தேதியன்று தனது உற்றார், உறவினர் புடைசூழ அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பாக அதிகமாக யாரும் வரவில்லை. அவரது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் என்று சொல்லப்பட்ட இருவரும், திருமண புரோக்கர் பாலமுருகன் என்பவரும் மட்டுமே வந்திருந்தனர். இதனையடுத்து திருமணத்திற்கு புரோக்கர் கமிஷனாக சுமார் ஒன்றரை லட்சம் வாங்கிக் கொண்டு அவர்கள் சென்றுவிட்டனர்.

இதனையடுத்து அழகான மனைவி கிடைத்த மகிழ்ச்சியில் தனபால் மணவாழ்க்கையை தொடங்கினார். அந்த வகையில் இரண்டு நாட்கள் இல்லறம் இனிதே நடந்துள்ளது. மூன்றாவது நாள் காலையில் விடிந்து எழுந்து பார்த்த தனபாலுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. படுக்கையில் இல்லாத மனைவி வீட்டில் வேறு எங்கு தேடியும் இல்லை. வெளியில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இதனைத்தொடர்ந்து போனில் தொடர்பு கொள்ள முயற்சித்து பார்த்தபோது அலைபேசி அனைத்து வைக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து புரோக்கர்கள் பாலமுருகன் மற்றும் அவரது உறவினர்களாக வந்தவர்களுக்கும் இதே பதற்றத்தோடு போனில் அழைத்து தகவலை சொல்ல முயற்சி செய்தார். ஆனால் அவர்களின் போனும் அனைத்து வைக்கப்பட்டிருந்தன. அதனால் சந்தேகம் அடைந்த தனபால் உடனடியாக வீட்டிலிருந்த பீரோவை திறந்து பார்த்திருக்கிறார்.

அதிலிருந்த பட்டுப்புடவை உள்ளிட்ட சந்தியாவின் பொருட்கள் அனைத்தும் காணாமல் போயிருந்தது. இதனால் நிலமையை உணர்ந்த அவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு பணம், நகைகளை எடுத்துக் கொண்டு சந்தியா தப்பிச் சென்றிருப்பதை உறுதி செய்து கொண்டார்.இதனையடுத்து பாதிக்கபட்ட தனபால் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த சூழ்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு நபருக்கு பெண் தேடிக் கொண்டிருந்தார்கள். அவருக்கு புரோக்கர் மூலம் சந்தியாவின் புகைப்படமும் வந்துள்ளது. ஆனால் அவர்களுக்கு சந்தியாவை தெரியும் என்பதால் சுதாரித்துக் கொண்டனர். திருமணம் செய்து கொள்ள விருப்பம் போல் மதுரையைச் சேர்ந்த தனலட்சுமி 45 என்ற புரோக்கரிடம் பேசி உள்ளனர். இது தரப்பு சம்மதம் தெரிவித்து நேற்று காலை திருச்செங்கோட்டில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதனையடுத்து நேற்று காலை சந்தியா, தனலட்சுமி உறவினர் ஐயப்பன் ஆகியோர் காரில் திருச்செங்கோடு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த தனபால் மற்றும் உறவினர்கள் மூவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பரமத்தி வேலூர் போலீஸாருக்கு தகவல் சொல்லி வரவழைத்து அவர்களிடம் மூவரையும் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் மதுரையைச் சேர்ந்த இவர்கள் இதுவரை சந்தியாவுக்கு ஆறு திருமணம் நடத்தி வைத்துள்ளதாகவும், நேற்று நடக்க இருந்தது ஏழாவதாக திருமணம் என்றும் தெரிய வந்துள்ளது.

ஒவ்வொரு திருமணத்தின் போதும் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு இரண்டு நாள் மட்டும் நெருங்கி பழகிவிட்டு எஸ்கேப் ஆகி விடுவது இவர்கள் வழக்கமாம். இனி இவர்கள் வேறு எங்கும் இப்படி மோசடி செய்யாதவாறு தக்க தண்டனையை போலீஸார் வழங்க வேண்டும் என்று அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திரைப்படத்தில் வரும் வடிவேல் காமெடி போல ஒரு பெண் 7 திருமணங்களை செய்து அனைவரையும் ஏமாற்றியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதி.மு.க எம்.எல்.ஏ.வின் மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியான பிறகும் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? – டிடிவி தினகரன் கேள்வி
Next articleமோசமான வானிலை காரணமாக 2 ஆவது டி 20 போட்டி தொடங்குவதில் தாமதம்!