7 பூண்டு 7 நாள் போதும்.. உங்கள் தொப்பை மளமளவென கரைய ஈஸி டிப்ஸ்!!

Photo of author

By Rupa

7 பூண்டு 7 நாள் போதும்.. உங்கள் தொப்பை மளமளவென கரைய ஈஸி டிப்ஸ்!!

நம்மில் பலருக்கு தொப்பை என்பது இருக்கும். அதாவது பெரிய வயிறு இருக்கும். இதனால் பெரும்பாலும் பலர் கேலி கிண்டல்களை சந்தித்து இருப்பீர்கள். இந்த தொப்பையை 7 நாட்களில் எவ்வாறு குறைப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தொப்பை என்பது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் அடி வயிற்க்கு கீழ் ஒன்று சேர்வதால் உண்டாகின்றது. பலரும் இந்த தொப்பையை குறைக்க கடினமான உடற்பயிற்சிகளை செய்வார்கள். ஆனால் அவ்வாறு கடினமான உடற் பயிற்சிகளை இனி செய்ய தேவையில்லை. இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் மருத்துவத்தை தொடர்ந்து 7 நாள் செய்து பாருங்கள். தொப்பை குறையும்.

தொப்பை மட்டுமல்ல கால், கை, தொடை போன்ற இடங்களில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைத்து உடல் எடையையும் குறைக்கும் ஒரு அற்புதமான மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.

தொப்பையை குறைக்க நமக்கு தேவையான பொருள் பூண்டு மட்டுமே. ஆம் நமக்கு இருக்கும் தொப்பையை குறைக்க ஏழு பூண்டு பல் எடுத்து அதை தோல் உரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் தோசைக் கல்லை சூட்க்கி அதில் எடுத்து வைத்துள்ள பூண்டுகளை போட்டு சுட்டு எடுக்க வேண்டும். சுட்டு எடுத்த பூண்டுகளை அப்படியே சாப்பிட்டால் போதும். இதை தொடர்ந்து ஏழு நாட்கள் செய்தால் தொப்பை குறையத் தொடங்கும்.

அதாவது நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் குறையத் தொடங்கும். பூண்டில் உடல் எடையை குறைக்கக் கூடிய விட்டமின் சி சத்தும் நார்ச் சத்தும் உள்ளது. இதனால் இந்த பூண்டுகளை நாம் சாப்பிடும் பொழுது அடி வயிற்றில் பல நாட்களாக தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கரைகின்றது. உடல் எடையை அதிகரிக்க காரணமாக பசி மற்றும் அதிக பசி கூறப்படுகின்றது. பூண்டை சாப்பிடுவதால் பசியானது கட்டுப்படுத்தப்படுகிறது.

இரண்டாவது வைத்திய முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் ஒரு டிஸ்பூன் சீரகத்தை எடுத்து அந்த சுடுதண்ணீரில் போட்டு நன்கு கலக்கி குடிக்கலாம். சீரகத்தில் உள்ள சத்துக்கள் அடி வயிற்றில் தேவையில்லாமல் தேங்கி கிடக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுகின்றது.

இந்த சீரகத் தண்ணீருடன் ஏழு சுட்ட பூண்டுகளை தொடர்ந்து ஏழு நாட்கள் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்ட வேண்டும். அவ்வாறு சாப்பிட்டு வந்தால் உடனடியாக 3-லிருந்து 5-கிலோ வரை உடல் எடை குறையும்.

இந்த சீரகத் தண்ணீர் மற்றும் சுட்ட பூண்டுகள் நம் உடல் எடையை குறைக்க சிறந்த பொருள். அது மட்டுமில்லாமல் தொப்பையாக உருவாகும் கெட்ட கொழுப்புகளையும் கரைக்கின்றது. மேலும் ஜீரணக் கோளாறை சரி செய்வதால் நம் உடலில் கெட்ட கொழுப்புகள் சேருவது தடுக்கப் படுகிறது.

அது மட்டுமில்லாமல் இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளையும் இந்த சீரகத் தண்ணீர் மற்றும் பூண்டுகள் குறைக்கின்றது.