இனி கொசு தொல்லையே இருக்காது.. இந்த 1 கற்பூரம் போதும்!!

0
132
#image_title

இனி கொசு தொல்லையே இருக்காது.. இந்த 1 கற்பூரம் போதும்!!

நம் வீட்டில் தினமும் இரவு கொசுக்கள் அதிகமாக இருக்கத்தான் செய்கிறது. என்னதான் கொசுவத்தி வைத்தாலும் சரி, குட்நைட், ஆல் அவுட் போன்ற மருந்துகளை பயன்படுத்தினால் சரி இந்த கொசுக்கள் குறைவதே இல்லை. கொசுத் தொல்லையால் நம்முடைய தூக்கமும் கெடுகிறது. இந்த கொசுக்களை ஒழித்து கொசுத் தொல்லையில் இருந்து விடுபட அற்புதமான ஒரு வழிமுறையை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

 

வீட்டில் இருக்கும் கொசுக்களை மட்டும் அல்ல எலிகளையும் எப்படி விரட்டுவது என்று இந்த பதிவில் காணலாம்.

 

கொசுக்களை எப்படி விரட்டுவது…

முதலில் வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்ட ஒரே ஒரு பொருளை பயன்படுத்தினால் போதும். ஆம் கற்பூரத்தை மட்டுமே வைத்து கொசுக்களை விரட்ட முடியும்.

இதற்கு மூன்றிலிருந்து நான்கு கற்பூரம் எடுத்துக் கொள்ளவும். பிறகு இந்த கற்பூரங்களை நன்றாக பொடி செய்து வீட்டில் எங்கிருந்து எல்லாம் கொசுக்கள் வருகிறதோ அங்கு எல்லாம் இந்த கற்பூரப் பொடியை வைத்தால் போதும். கொசுக்கள் நம் வீட்டிற்குள் நுழைய முடியாது. அல்லது ஒரு கற்பூரத்தை பற்ற வைத்து அறை முழுவதும் அந்த புகையை பரவ விடுவதன் மூலமும் கொசுக்களை வீட்டிலிருந்து விரட்டி அடிக்கலாம்.

எலிகளை எவ்வாறு விரட்டுவது…

வீட்டில் இருக்கும் எலிகளையும் விரட்டுவதற்கு இங்கு நாம் ஒரே ஒரு பொருளை பயன்படுத்தப் போகிறோம். வெங்காயத்தை வைத்து மட்டுமே எலிகளை வீட்டிலிருந்து விரட்டி அடிக்க முடியும். வெங்காயத்தில் இருந்து வெளிவரும் சாறு எலிகளை கொல்லும் விஷமாக இருக்கிறது. அதனால் வெங்காயத்தை எடுத்து வட்ட வட்டமாக அறுத்து வீட்டிற்குள் எலிகள் எங்கு அதிகமாக உள்ளதோ அல்லது எந்த இடத்தில் அதிகமாக வந்து செல்கிறதோ அந்த இடங்களில் எல்லாம் வெங்காயத்தை வைக்க வேண்டும். எலிகள் அந்த இடத்தில் இருந்து ஓடி விடும்.

 

கருப்பு மிளகை பொடி செய்து வீட்டிற்குள் எலிகள் உலாவும் இடங்களில் அந்த பொடியை தூவி விடுவதன் மூலமும் எலிகளை வீட்டிற்குள் இருந்து விரட்டலாம். இது மட்டுமில்லாமல் பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் பிரியாணி இலையை வைத்தும் எலிகளை விரட்டலாம். குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பேபி பவுடரை வைத்தும் எலிகளை விரட்டலாம். வீட்டில் எலிகள் அதிகம் வந்து செல்லும் இடத்தில் இந்த பேபி பவுடரை தூவி விட்டால் எலிகள் தானகவே வீட்டை விட்டு வெளியேறும்.