இந்த ஊர்களுக்கு செல்ல கூடுதலாக 720 பேருந்துகள் இயக்கம்! மகிழ்ச்சியில் அப்பகுதி மக்கள்!
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .அதன்அடிப்படையில் இந்த ஆண்டு கோட்டை மாரியம்மன் விழாவையொட்டி கடந்த பத்தாம் தேதி சேலம் மாவட்டம் நிர்வாக சார்பில் உள்ளீர் அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும் அதன் பிறகு 11 ,12 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் முறை மேலும் இதனால் வெளியூர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் என ஏராளமானவர்கள் சேலத்தில் கடந்த வாரங்களில் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து விடுமுறைக்கு பிறகு அவரவர் வேலை பார்க்கும் இடங்களுக்கு செல்ல வசதியாக நேற்று புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு இருந்தது. மேலும் அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டை மேலாண்மை இயக்குனர் பொன்முடி கூறும் போது தொடர் விடுமுறை முடிந்த பயணிகள் செல்ல வசதியாக காலை முதல் நள்ளிரவு வரை சிறப்பு பேருந்துகள் இயங்கப்பட்டது.
மேலும் நள்ளிரவுகளுக்கு பிறகும் பயணிகள் வருகை ஏற்ற பேருந்துகள் இயக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் வழக்கமாக சேலத்தில் இருந்து கோவைக்கு 60 பேருந்துக்களும் இயக்கப்பட்டது. நேற்று கூடுதலாக 94% என மொத்தம் 154 பேருந்துகள் திருப்பூருக்கும் வழக்கத்தைவிட முப்பது பேருந்துக்களும் கூடுதலாக 22 பேருந்துகளும் இயக்கப்பட்டது .
மேலும் இது போன்ற மதுரை மாவட்டத்திற்கு 15 பேருந்துகளும் திருச்சிக்கு 35 பேருந்துக்களும் பெங்களூருக்கும் 125 பேருந்தும் சென்னைக்கு 50 பேருந்துகளும் திருவண்ணாமலையில் 10 பேருந்துகளும் , விழுப்புரத்திற்கு 10 பேருந்துகளும், திண்டுக்கலுக்கு பத்து பேருந்துகளும் கூடுதலாக 350 சிறப்புகள் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.