சென்னையில் இருந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து!

0
244

சென்னையில் இருந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து!

மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் எட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 4:55 மணிக்கு சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் விமானம், காலை 6:15 மணிக்கு மதுரை செல்லும் விமானம், பகல் 1:10 மணிக்கு கர்னூல் செல்லும் விமானம், மாலை 5:10 மணிக்கு மதுரை செல்லும் பயணிகள் விமானம் ஆகிய நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அதேபோல் மும்பையில் இருந்து இன்று அதிகாலை 12.30 மணிக்கு சென்னை வரும் விமானம், காலை 9:30 மணிக்கு மதுரைலிருந்து சென்னை வரும் விமானம், மாலை 4:20 மணிக்கு கர்னூல் இருந்து சென்னை வரும் விமானம், இரவு 8:30 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை வரும் விமானம் ஆகிய நான்கு வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான பிளாட்பார்ஸ், இலங்கை, பாரிஸ், தோகா, சார்ஜா, துபாய், அந்தமான் ஆகிய ஏழு விமானங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.

தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துள்ளது.

Previous articleகாதலனுடன் உல்லாசமாக வாழ பெற்ற மகளை பலியாக்கிய தாய்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்..!
Next articleபயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.. தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கை..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here