ஒரே சிறுவனிடம் சிக்கிய அடுத்தடுத்து 8 மாணவிகள்! பாலியல் விழிப்புணர்வில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!
தற்போது பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் சீண்டல் விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
அப்போது 5 ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனக்கு அதே பகுதியை சேர்ந்த 16 வயது வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்தார் என ஆசிரியர்களிடத்தில் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மேலும் ஏழு மாணவிகள் எழுந்து தங்களுக்கும் அந்த நபர் தான் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், அச்சிறுமி 8 பேரையும் அழைத்து மேற்கொண்டு விசாரணை செய்தனர்.விசாரணையில் ,கடந்த கொரோனா காலத்தின் போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த வாலிபர் வீட்டிற்கு வந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து ஆசிரியர்கள் உடனடியாக காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் துறையினர் அந்த வாலிபர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.16 வயதுடைய வாலிபர் ஒருவர் 8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெற்றோர்களே பிள்ளைகளுக்கு அந்நிய நபர்களின் தொடுதல், செய்கைகள் குறித்து சொல்லி கொடுக்க வேண்டும்.ஏதேனும் தவறு என தெரிந்தால் உங்களிடம் கூற சொல்லுங்கள்.இதனால் மேற்கொண்டு வரும் பிரச்சனைகளை குழந்தைகள் அஞ்சாமல் எதிர்கொள்வர்.