நானும் பள்ளியில் அந்த பிரச்சனையை சந்தித்தேன்!!!!!96 பட குட்டி ஜானு “கௌரி” சொன்ன பகீர் தகவல்!!

Photo of author

By Kowsalya

PSBB பள்ளி மாதிரி தான் எங்க பள்ளியும் இருந்தது. இந்த மாதிரியான பிரச்சினைகளை நானும் எதிர் கொண்டேன். என 96 படத்தில் நடித்த கௌரி கிஷன் போட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாக 30க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்த நிலையில் இது தொடர்பாக ராஜகோபாலனை விசாரித்த போலீசார், அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அந்த பள்ளியில் நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

PSBB பள்ளியைப் போலவே பல்வேறு தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு இது போன்ற பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்படுகின்றன என வலைதளங்களில் பரவி வருகிறது.

 

தங்கள் குழந்தைகள் இதுபோன்ற பாலியல் பிரச்சனைகளை தரும் ஆசிரியர்களைப் பற்றி பெற்றோர்களிடம் தெரிவித்தாலும் பெற்றோர்கள் பெரிய பள்ளியில் படிக்கும் வாய்ப்பு பறிபோய் விடுமோ என அஞ்சி சொல்லாமல் இருக்கிறார்கள் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

 

இந்த நிலையில் 96 படத்தில் நடித்த குட்டி ஜானு அதாவது கௌரி கிஷன் PSBB பள்ளியை போன்று தான் எங்கள் பள்ளியும்., இந்தப் பிரச்சனையை நானும் எதிர் கொண்டு உள்ளேன். என்னுடன் படித்த சக மாணவிகளும் இந்த பிரச்சனையை சந்தித்து உள்ளார்கள் என, இன்ஸ்டாகிராமில் போஸ்டர் ஒன்றை போட்டு அதிர்ச்சியை கிளப்பி உள்ளார்.

 

96 , மாஸ்டர், கர்ணன் போன்ற படங்களில் நடித்த கௌரி கிஷன் அடையாரில் உள்ள இந்து சீனியர் செகண்டரி பள்ளியில் தான் படித்தேன் , அந்த பள்ளியிலும் இதே போன்ற பாலியல் ரீதியான பிரச்சனைகளை சந்தித்தேன், மாணவர்களை துன்புறுத்தியதாக ஏகப்பட்ட பிரச்சினை கொடுக்கப்பட்டதாகவும் மனம் திறந்துள்ளார்.

 

மேலும் தன்னுடன் படித்த மற்றும் அந்த பள்ளியில் படித்த மற்ற மாணவ மாணவிகளிடம் இதுதொடர்பாக விசாரணை செய்த பின்பே இந்த பதிவை செய்ததாகவும், தற்போது படிக்கும் மாணவிகள் இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்தால் பயப்படாமல் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.