குட் நியூஸ்! 10th, 12th,Degree படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! மாதம் ரூ.19,500 ஊதியம்!
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் (Oil India) ஆனது புதிய வேலைவாய்ப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Contractual Drilling / Workover Assistant Operator பணிக்கான பணியிடங்கள் நிரப்ப ஆட்கள் தேவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.oil-india.com என்ற வலைதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்சமாக 45 வயதான இருக்கவேண்டும்.
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் எதனினும் பயின்று இருக்கவேண்டும். அதாவது 10வது / 12வது / Diploma / any Degree முடித்திருக்க வேண்டும். தற்போது வெளியிட்டுள்ள பணிக்கு மொத்தம் 48 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் வலைதளத்தில் மூலம் 27.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிங்க வேண்டும்.
Walk-In Practical / Skill Test மற்றும் Personal Assessment ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளது விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.