1 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை! அரசு திடீர் முடிவு!

0
110
School holidays for students from class 1 to 12! Government abrupt decision!
School holidays for students from class 1 to 12! Government abrupt decision!

1 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை! அரசு திடீர் முடிவு!

கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகள் பள்ளிகள் திறக்காத நிலையில் தற்போது தான் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். கொரோனா பரவல் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதனையடுத்து தற்போது மழைக்காலம் தொடர்ந்து மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடக்கி வைக்கிறது. தற்போது தான் கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் அனைவரும் பள்ளிக்குச் செல்ல தொடங்கினர்.

இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. கனமழை எச்சரிக்கையின் காரணமாக அங்குள்ள பள்ளிகள் அனைத்தும் ஜூலை 1 வரை விடுமுறை அளித்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அருணாச்சலம் பிரதேச மாநில தலைநகர் இட்டாநகரில் மிகவும் கனத்த மழை பெய்து வருகிறது.மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அந்தப்பகுதியில் உள்ள தொடக்க உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என அனைத்து வகுப்புகளுக்கும் ஜூலை 1 வரை விடுமுறை அளித்து ஐ சி ஆர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அப்பகுதியில் கனத்த மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. சாலைகளும் சேதம் அடைந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலை சீர் அமைப்பு பணிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவு செய்துவிட்டு பள்ளிகள் தொடங்க வேண்டும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.