ரூ.85 லட்சத்திற்கு ஒரே ஒரு வாழைப்பழம் வாங்கிய அமெரிக்கர்.
வெங்காய விலை ரூபாய் 100க்கு மேல் விற்பதையே நம் மக்கள் புலம்பிக் கொண்டு வரும் நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒருவர் ஒரே ஒரு வாழைப்பழத்தை ரூபாய் 85 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மவுரிசியா என்பவர் வித்தியாசமான கலைப்பொருட்களை கண்காட்சியில் வைப்பதில் புகழ் பெற்றவர். இவர் ஏற்கனவே தங்க கழிவறை உள்ளிட்ட பல பொருட்களை கண்காட்சியில் வைத்து பொது மக்களிடையே பிரபலம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள மியாமி என்ற பகுதியில் நடைபெற்று வரும் கண்காட்சியில் ஒரு நிஜ வாழைப்பழத்தை சுவரில் ஸ்டிக்கர் வைத்து ஓட்டியுள்ளார். அந்த வாழைப்பழத்தை பார்த்த பலர் அதன் முன் செல்பி மற்றூம் குரூப் புகைப்படம் எடுத்து வந்தனர்.
இதனால் இந்த வாழைப்பழம் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த வாழைப்பழத்தை வந்து பார்த்து விட்டுச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த வாழைப்பழம் ஏலம் விட்டபோது இதனை இந்திய மதிப்பில் 85 லட்சம் ரூபாய்க்கு அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் என்பவர் ஏலம் எடுத்தார். அதுமட்டுமின்றி ஏலம் எடுத்த உடன் அந்த வாழைப்பழத்தை அவர் அங்கேயே உரித்து சாப்பிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை வாழைப்பழங்கள் பஜாரில் கிடைக்கும் நிலையில் இந்த அமெரிக்கர் ரூபாய் 85 லட்சம் கொடுத்து இந்த வாழைப்பழத்தை வாங்கி அதை உடனே சாப்பிட்டு உள்ளது நெட்டிசன்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.