பள்ளி மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்த சூப்பர் போட்டி! பரிசு தொகை ரூ.10 ஆயிரம்!

0
123

பள்ளி மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்த சூப்பர் போட்டி! பரிசு தொகை ரூ.10 ஆயிரம்!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான, பேரறிஞர் அண்ணா மெட்ராஸ் மாகாணம் என்ற இருந்ததை மாற்றி 1968 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தனர். இதற்காக ஜூலை பதினெட்டாம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் ஜூலை பதினெட்டாம் தேதி அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதன்படி ஜூலை 18ஆம் தேதி அன்று ஒவ்வொரு ஆண்டுதோறும் ஆண்டும் தமிழ்நாடு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி ஆகியவற்றை நடத்தப்படுகிறது.

மேலும் இப்போட்டிக்கு ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழா தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற 6ஆம் தேதி அன்று காலை 9:30 மணிக்கு மாணவ, மாணவிகள் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நட த்தப்படுகிறது.

இதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 18ம் தேதி ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் தங்கள் பயிலும் பணியின் தலைமை ஆசிரியரிடம் பரிந்துரைத்து கடிதத்தை பெற்று வர வேண்டும்.

இந்த கட்டுரை மற்றும் பேச்சு போட்டியில் தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள், தமிழ்நாடு நாட்டிற்காக உயிர் கொடுத்த தியாகிகள், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு, பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு, சங்கலிங்கனாரின் உயிர் தியாகம், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தின் தந்தை பெரியார், மொழிமாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பெ.சி, சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைப் போர் தியாகிகள் உள்ளிட்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதில் கலந்து கொள்ளும் விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதுமட்டுமின்றி இரண்டாவது பரிசாக 7000 ரூபாய் மற்றும் மூன்றாவது பரிசாக 5000 ரூபாய் வழங்கப்படும்.

Previous articleஒரே நேரத்தில் அரசு பணியாளர்களுக்கு பணி உயர்வு! ஆச்சரியத்தால் தலைமை செயலக பணியாளர்கள்!
Next articleமீண்டும் ஆன்லைன் வகுப்புகளா?அதிர்ச்சியில் பெற்றோர்கள்!