இனிப்போ இனிப்பு! ஒரு தடவை சுவைத்தால் மீண்டும் சுவைக்க தூண்டும்! கரும்பில் அப்படி என்னங்க இருக்கு!!

0
166

இனிப்போ இனிப்பு! ஒரு தடவை சுவைத்தால் மீண்டும் சுவைக்க தூண்டும்! கரும்பில் அப்படி என்னங்க இருக்கு!!

சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில் தான் கரும்பு முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவில் சர்க்கரை தயாரிக்கும் முறை கி.மு.100 -ம் ஆண்டில் சீனாவில் தான் தொடங்கியது.சர்க்கரை என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியின் சர்க்கராஎன்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது.

கி.பி 636 ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு, இன்று 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கரும்பு பயிரிடப்படுகிறது. உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. புறநானூற்றின் 99 ஆவது பாடல் அதியமான் என்ற சேரமன்னன் கரும்பைத் தமிழகத்தில் அறிமுகபடுத்தினார்.

இது கிராமினோ என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். தென் ஆசியாவில் சூடான வெப்பமண்டல பகுதிகளில் வளரக்கூடிய, உண்பதற்கு இனிக்கும் சர்க்கரை நிறைந்த ஒரு இடை தட்ப வெப்ப நிலைத் தாவரம் ஆகும்.வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு பயிர் செழித்து வளரும்.

உலகெங்கும் 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 20 மில்லியன் ஹெக்டேர்களில் வணிகப் பயிராக கரும்பு பயிரிடப்படுகிறது. இது நீண்ட இழைமத் தண்டுகளாகவும், தண்டுகளின் கரணைகளில் இருந்து இலைகள் மேலெழுந்து சோலையாக வளரும் இயல்புடையது. கரும்பு 6 அடி முதல் 19 அடி உயரம் வரை வளரக் கூடியது.

புல் இனத்தைச் சேர்ந்தவை இந்த கரும்பு.மக்காச்சோளம், கோதுமை, அரிசி, மற்றும் பல தீவனப் பயிர்கள் உள்ளிட்ட பொருளாதார முக்கியத்துவமான தாவர குடும்பத்தைச் சேர்ந்தது.கரும்பு ஒரு பணம் கொழிக்கும் வாணிகப் பயிராகும்.

பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் 50 விழுக்காட்டிற்கும மேற்பட்ட கரும்பை உற்பத்தி செய்கிறார்கள். க்கியூபா அதிக அளவில் கரும்பு பயிரிடுவதால் உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படுகிறது.

கரும்பிலிருந்து பெறப்படும் ஒரு முக்கியப் பொருள் சுக்ரோஸ் ஆகும். இது கரும்பின் தண்டுப்பகுதிகளில் சேர்த்து வைக்கப்படுகிறது. கரும்பாலைகளில் இதன் சாறினைப் பிழிந்து தூய்மைப்படுத்தப்பட்ட சுக்ரோஸ் பிரித்தெடுக்கப்படுகிறது.

மேலும் இந்த கரும்பு சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். ஜீரண சக்தி அதிகரிக்கும். எனவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த கரும்பினை விரும்பி சாப்பிடுவார்கள்.

Previous articleவெள்ளிக்கிழமை நாளன்று வீட்டில் இதையெல்லாம் செய்யாதீர்கள்!
Next articleஉங்கள் போனில் டெலிட் ஆன போட்டோ 5 நிமிடத்தில் மீண்டும் கிடைக்கும்! இவ்வாறு செய்யுங்கள்!