அ.தி.மு.க பொதுக்குழுவை நடத்த பச்சை கொடி காட்டிய சென்னை ஐகோர்ட்டு!! நாளை வெடிக்கவிருக்கும் தீர்ப்பு?
சென்ற மாதம் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.இதைதொடர்ந்து பன்னீர்செல்வம் தரப்பினர் தொடுத்த வழக்கில் தடை செய்யப்படாததுடன் பச்சைக் கொடியும் காட்டப்பட்டது.அதற்கு பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு நடந்தே தீரும் என கோஷமிட்டார்கள்.
இந்நிலையில் சென்னை ஐகோர்ட் வெளியிட்ட உத்தரவுக்கு தடை கோரி அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் கடந்த மாதம் ஜூன் 18ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.மேலும் இந்த மனுவை விரைவில் விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் உத்தரவுட்டுள்ளனர்.
கோடை விடுமுறைக்காலம் என்பதால் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வழக்கை தொடுத்தார். இதற்கு நீதிபதிகள் கூறியிருப்பதாக பொதுவாக கோடை கால விடுமுறை அமர்வு என்பதால் இது போன்ற முறையீடுகளை ஏற்று விசாரிப்பதில்லை என தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டார்.
பின்புகோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க தொடங்கியது. எனவே மேல்முறையீட்டு மனுவை நாளை புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என மீண்டும் முறையிட்டார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வக்கீல் கௌதம் சிவசங்கர் பரவாயில்லை என்று கூறி இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டியதில்லை.
நீங்கள் கூறிய படி கோடைகால விடுமுறை நிறைவடைந்த பிறகே விசாரணை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்து பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட்ட தலைமை நீதிபதி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமியின் மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.மேலும் நாளை சுப்ரீம் கோர்ட்டில் எந்த தரப்புக்கு வழக்கு சாதகமாக அமையும் என பரபரப்பில் இரு கட்சியினரும் அமைதி காத்துள்ளர்கள்.