ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தில் அப்பகுதி! 

0
182
A child died when a palm tree suddenly broke!
A child died when a palm tree suddenly broke!

ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தில் அப்பகுதி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வாதலக்கரை கிராமத்தைச் சேர்ந்த மாரிப்பாண்டியன். இவரின் மனைவி மாரித்தாய். மாரிப்பாண்டியன் சென்னையில் உள்ள இனிபகத்தில் ஸ்வீட் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இத்தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளன. இறுதியில் மூணாவது மகளாக ஒரு வயது சிறுமி மகாலட்சுமி.மாரித்தாய் குழந்தை பார்ப்பதற்காக வேலைக்கு செய்லாமல் வீட்டு வேலையை மட்டும் செய்துவந்தாள். தினம்தோறும் இப்படியே சில நாட்கள் கழிந்தது.

வழக்கம் போல மாரித்தாய் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தால், அப்போது மகாலட்சுமி குழந்தை வீட்டிற்கு வெளிய விளையாடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த மாரித்தாய் குழந்தை விளையாடி கொண்டு இருக்குறது நாம் வீட்டு வேலை செய்யலாம் என்று எண்ணி வீட்டிற்குள் சென்றாள். அங்கு விளையாடிக் கொண்டிருந்த மகாலட்சுமி வீதியில் குளியலறைக்கு சென்றாள். அங்கு இருத்த 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் பாலில் தண்ணிரை பார்த்தவுடன் குழந்தை  விளையாட தொடங்கியது.

திடிரென குழந்தை பிளாஸ்டிக் வாளி நீரில் தலைக்குப்புற விழுந்து துடித்துள்ளார். வீட்டு வேலையை முடித்து விட்டு சிறிது நேரம் கழித்து தனது மகளை தேடி அலைந்தாள். பின்னர் மாரித்தாய் பிளாஸ்டிக் பாலையில் சிறுமி மகாலட்சுமி இருந்து கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தால் வேகமாக துக்க்கினாள். உடனே தூக்கி பார்த்த பொது  பேச்சு மூச்சின்றி மயக்க நிலையில் இருந்த சிறுமியை, சிறுமியின் தாய் மற்றும் கிராம மக்கள் உடனடியாக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.

ஆனால் மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை ஆய்வுக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் சிறுமியின் உயிரிழப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleபெண்ணை காதலித்தது குற்றமா? சோகத்தில் குடும்பத்தினர்!
Next articleதொடர் கனமழையால் விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலாட் எச்சரிக்கை!