பெண்ணை காதலித்தது குற்றமா? சோகத்தில் குடும்பத்தினர்!

பெண்ணை காதலித்தது குற்றமா? சோகத்தில் குடும்பத்தினர்!

கோவை மாவட்டம் புதுக்கோட்டை அருகில் ஆவடையூர் கோவில் அருகே உள்ள பெரிய குலத்தைச் சேர்ந்தவர் சம்பன் காளி. இவருக்கு ஒரே மகன் பிரதீப் (21) இவர் பிபிஏ படித்துள்ளார். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் இவர் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் இவரது தாய் கோவையில் உள்ள அவரது உறவினர் ரமேஷ் என்பவரிடம் பிரதீப்புக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்து தாருங்கள் என்றும் கேட்டுள்ளார்.

நேற்று பிரதீப்  கோவையில் உள்ள சரவணன் பட்டி சிவானந்தபுரம் சிவசக்தி நகரில் உள்ள ரமேஷ் என்பவரின் வீட்டிற்கு சென்றார். அங்கு ரமேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அக்கம் பக்கத்தினர் பார்த்து போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர்.

 மேலும் அந்த தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரதீப்பின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில். பிரதீப் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அந்த பெண் இவரது காதலை ஏற்க மறுத்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் எனவும் விசாரணையில் தெரியவந்தது.

ஒரு பெண்ணே காதலித்த காரணத்தால் இவர் தற்கொலை செய்து கொண்டாரா என ரமேஷ் சந்தேகம் அடைந்தார்.   மேலும் ரமேஷ் சரவணன் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment