Breaking News, Crime, District News

திடீரென பனைமரம் முறிந்து விழுந்ததில் குழந்தை பலி! 

Photo of author

By CineDesk

திடீரென பனைமரம் முறிந்து விழுந்ததில் குழந்தை பலி

தூத்துக்குடியில் பலத்த காற்று காரணமாக பனைமரம் சரிந்து விழுந்து உயிரிழந்த ஒரு வயது குழந்தையின் குடும்பத்தினரையும் காயமடைந்து ஜெபிஜே பெற்று வரும் பெண்ணையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ரூபாய் ஒரு லட்சத்து 25 ஆயிரம் நிவாரண தொகை வழங்கினார்.

தூத்துக்குடி கே பி கே நகர் பகுதியில் சேர்ந்த இசக்கி குடும்பம் வாழ்ந்து வந்தனர். இவருக்கு ஒரு வயது குழந்தை முத்து பவானி. நேற்று இரவு தூத்துக்குடி பகுதியில் பலமாக காற்று வீசியது. இசக்கி குடும்பத்தினர் பலத்த சூறைக்காற்றில் சிக்கிக்கொண்டனர். திடீரென பனைமரம் முறிந்து விழுந்ததில் முத்து பவானி குடும்பத்தினர் இந்த விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தனர்.

ஊர்மக்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தை முத்து பவானி பரிதாபமாக உயிரிழந்தது. இந்நிலையில் அரசு மருத்துவமனையில், உயிர் இழந்த குழந்தையின் குடும்பத்தினரையும் இந்த விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் குழந்தையின் குடும்பத்தினரையும் அத்தை ராஜேஸ்வரி ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் அவர்களுக்கு நிவாரண தொகையாக ரூபாய் 1-லட்சத்து 25-ஆயிரம் வழங்கினார். மேலும் சிகிச்சை பெற்று வரும் ராஜேஸ்வரிக்கு முயற்சி அளிக்க மருத்துவர்களுக்கு கனிமொழி கருணாநிதி எம்பி உத்தரவிட்டார்.

“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…” அடுக்கு மொழியில் பேசி கலக்கிய TR… லண்டனில் இருந்து வெளியான வீடியோ!

தமிழகத்தில் இந்த பகுதிகளில்  கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

Leave a Comment