கோவை மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு! கட்டாயமாக இவற்றை செய்ய வேண்டும்!

Photo of author

By Parthipan K

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு! கட்டாயமாக இவற்றை செய்ய வேண்டும்!

கோவை மாவட்ட மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேற்று அறிக்கை ஒன்றை வெளியட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழ்நாடு அரசு பொது இடங்களுக்கு வரும் பொது மக்கள் அனைவரும் கட்டாயமாக  முககவசம் அணிந்திருக்க  வேண்டும். கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

அதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான ரயில் நிலையங்கள் ,உழவர் சந்தை, பேருந்து நிலையம் ,வாரச்சந்தை, வணிகவளாகங்கள் போன்ற இடங்களில் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும் கிருமிநாசினி  பயன்படுத்த வேண்டும். முககவசம்  கட்டாயம் அணித்திருக்க வேண்டும்.

கோவை மாநகராட்சியில் உள்ள 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களிலும் கொரோன  தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தாத நபர்கள் உடனடியாக தடுப்புச் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். மேலும் தற்போது பள்ளிகளில்  கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது அங்கு பயிலும் 14 வயது வரை உள்ள மாணவர்களும் 15 முதல் 18 வயது உள்ள மாணவர்களும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் முககவசம்  அணியாதவர்களுக்கு  500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட வேண்டும். மேலும்  மாநகராட்சியில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் இவை அனைத்தையும்  கண்காணித்து வரவேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.