அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

0
97
A good news for public school students? Notification released by Tamil Nadu Government!!
A good news for public school students? Notification released by Tamil Nadu Government!!

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

மாணவர்களின் மனநிலையை கருதி தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. அதாவது தொழில்முறை கலைஞர்களாக பின்னாளில் வருவதற்கான வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு உருவாக்கத் தரும் நோக்கத்தோடு பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் மற்றும் செயல்பாடுகளையும் தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. ஒரு பகுதியாக மாதந்தோறும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு  திரையிடல் திட்டம் ஒன்றை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதற்கு  சிறார் திரைப்பட விழா எனவும் பெயரிடப்பட்டுள்ளது.இந்தத் திரையிடல் வாயிலாக உலகத்தை புதிய பாதையில் மாணவருக்காக  வைப்பதும், வாழ்வின் பண்புகளையும் மேம்படுத்துவதற்காகவே இம்முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகின்றது.அனைத்து நடுநிலை அரசு பள்ளிகளும், உயர்நிலைப் பள்ளிகளும் மற்றும் மேல்நிலைப் பள்ளி என மூன்று பிரிவுகளிலும் மாதத்தில் இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதில் கதைக்களம், கதை மாந்தர்கள், உரையாடல் ,கதை நடக்குமிடம், ஒளிப்பதிவு பயன்படுத்தப்பட்ட நேரங்கள், ஒளி மற்றும் ஒட்டுமொத்த திரைப்படம் பற்றிய அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தும் வகையில் ஸ்டார்ட் லைட் என்ற நிகழ்வு பயன்படுத்தப்பட்டு வருகிறது .

இந்நிகழ்ச்சியில் மிகச் சிறப்பாக பதில் அளிக்கும் ஒருவருக்கு மட்டும் பரிசுகள் வழங்கப்படும். இதை பள்ளி அளவில் சிறந்து விளங்கும் மாணவ,மாணவிகளை ஒன்றிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மற்றும் மாணவியர்களை மாவட்ட அளவிலும் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்.

இந்த சிறார் திரைப்பட திருவிழா மாநில அளவில் ஒரு வாரத்திற்கு நடைபெறும். இதில் பங்கு கொள்ளும் மாணவர்களில் இருந்து 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உலக சினிமா குறித்து மேலும் அறிந்து கொள்ளும் வகையில் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

செயல்பாட்டுகென சில்வர் ஸ்கிரீன் ஆப் என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டு அதன் வாயிலாக அனைத்து நிகழ்வுகளும் ஒருங்கிணைக்கப்படும். எனவே பள்ளி குழந்தைகள் இதனால் நுண்ணறிவை வளர்க்க ஏற்ப வாய்ப்பாக அமையும் என தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K