சேலம் மாவட்டத்தில் லாரி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதி முழுவதும் பரபரப்பு!
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள குரல்நத்தம் பெரியூர்கல்மேடு என்ற பகுதியில் நேற்று காலை 11 மணிக்கு ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை இயக்கியவர் தும்பல் பட்டி இரட்டைபுலிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35).
அதே நேரத்தில் பனமரத்துப்பட்டியில் இருந்து குரால்நத்தம் நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது டிப்பர் லாரி நிலை தடுமாறி தனியார் பஸ் மீது மோதியது. அந்த விபத்தில் பஸ்ஸின் முன் பகுதி மற்றும் லாரியின் முன் பகுதியும் சேதம் அடைந்தது.
அந்த டிப்பர் லாரியை இயக்கி வந்தவர் சேலம் செங்கரடு பகுதியைச் சேர்ந்த துரைமுருகன் (27). அவர் பஸ் மற்றும் லாரியின் இடிபாட்டுக்குள் சிக்கிக்கொண்டார். மேலும் அக்கம் பக்கத்தினர் பனமரத்துப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இடுபாட்டில் சிக்கி கொண்டிருந்த லாரி ஓட்டுனரை ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் இடுபாட்டில்லிருந்த துறைமுகனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும்பேருந்தில்லிருந்த டிரைவர் மணிகண்டன் கண்டக்டர் செங்கோட்டையன் (47), பயணிகள் மகேஸ்வரி (45), செல்லம்மாள் (47), செந்தில்குமார் (44) ஏற்படுகாயம் அடைந்தனர் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.