கண் இமைக்கும் நொடியில்.. கணவன் முன்பே உயிரிழந்த மனைவி!
ஆவடி அடுத்த திருநின்றவூர் ராமதாசபுரம் நடுகுத்தகையைச் சேர்ந்தவர் முருகேசன் வயது 52 இவரது மனைவி சுமதி வயது 45 நேற்று இருவரும் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பேஷன் ப்ரோ இருசக்கர வாகனத்தில் காக்கரில் இருந்து பூந்தமல்லி பனிமலர் மருத்துவமனைக்கு அவரது உறவினரை பார்க்கச் சென்றனர்.
ஜெயா கல்லூரி அருகே இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். திடீரென பின்னால் இருந்து வந்த லாரி எதிர்பாராத விதமாக இவர்களது இரு சக்கர வாகனத்தில் மீது உரசியது. இரு சக்கர வாகனத்தின் பக்கவாட்டில் உரசியதால் சுமதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்த உடனே பின்னால் வந்து கொண்டு இருந்த லாரி சுமதியின் மீது ஏறி இறங்கியது.
பின்னர் படுகாயம் அடைந்த அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது. இந்த தகவலை கேட்டவுடன் அவரது கணவர் கத்தி அழுதான். பின்னர் போலீசாருக்கு தகவலை தெரிவித்தனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வைத்தனர் பின்னர் லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தினர்.