வாரிசு படமும் இவ்வளவுதானா? கடுப்பான விஜய் ரசிகர்கள்!
விஜய் தற்போது வம்சி இயக்கிததில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு விஜயின் பிறந்தநாளையொட்டி வாரிசு என பெயர் வைக்கப்பட்டது. இந்த படத்தின் நான்காம் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் துவங்கி நடந்து வருகிறது.இந்த ஷுட்டிங் ஒரு வாரம் வரை நடைபெற உள்ளதாம். இதற்காக தான் விஜய் தற்போது ஐதராபாத் சென்றுள்ளார். நான்காம் கட்ட ஷுட்டிங்கில் குடும்பசென்டிமென்ட் சீன்கள் படமாக்கப்பட உள்ளதாம் என கூறப்படுகிறது.
வாரிசு படம் 2023 ம் ஆண்டு பொங்கல் ரிலீஸ் என ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள். வாரிசு படத்துடன் 3 பெரிய படங்கள் பொங்கல் ரேசில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் கதை பற்றி வெளியாகி உள்ள தகவல்கள் விஜய் ரசிகர்களை மட்டுமல்ல அனைவரையும் அதிர வைத்துள்ளது. இதுவரை கிடைத்த தகவலின்படி, வாரிசு படத்தின் கதை, லற்கோ வின்ச் என்ற பிரெஞ்சு படத்தின் கதை தான் என்பது தெளிவாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்ட போதே இந்த தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
இந்த படத்தின் கதை கோடீஸ்வர தொழிலதிபர் ரகசியமாக ஒரு மகனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டில் வளர்க்கப்படும் அந்த மகன், தனது தந்தை கொலை செய்யப்பட்ட பிறகு, அவரின் நிதி சாம்ராஜ்யம் தவறானவர்களின் கைகளில் சென்று விடாமல் தடுக்கிறார். எதிர்ப்புக்களை எவ்வாறு சமாளிக்கிறார், தனது தந்தையின் கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்து, சொத்துக்களின் வாரிசு தான் தான் என்பதை எவ்வாறு நிருபிக்கிறார் என்பது தான்.
டைரக்டர் வம்சி பைடபள்ளி ஏற்கனவே ஒலிவியர் நாக்காச்சே மற்றும் எரிக் டோலிடானோ என்ற பிரெஞ்சு படத்தை தழுவி தான் தெலுங்கில் ஒபேரி, தமிழில் தோழா ஆகிய படங்களை இயக்கினார். நாகர்ஜுனா, கார்த்தி நடித்த இந்த படம் செம ஹிட் ஆனது. இதே போல் தற்போது வாரிசு படத்தின் கதையையும் இந்திய ஆடியன்சின் விருப்பத்திற்கு ஏற்ப சற்று மாற்றி அமைத்துள்ளாராம் வம்சி பைடபள்ளி.
லார்கோ வின்ச்’ கதையை செம சுவாரஸ்யமான கதையாக வம்சி மாற்றி அமைத்து, வாரிசு படமாக இயக்கி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ‘லார்கோ வின்ச் கதையை தான் அவர் ரீமேக் செய்து வருகிறார் என்பதற்கு எந்த விதமான அதிகாரப்புர்வமான உறுதியான தகவலும் இல்லை. இந்நிலையில் விஜய் ரசிகர்கள்பீஸ்ட் தான் போச்சு. வாரிசு படமாச்சும் காப்பாத்தும் என நம்பிக்கையில் இருந்தால், இப்போது அதுவும் போச்சா என விஜய் ரசிகர்கள் கடுப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர்.