சேலம் மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் மனைவி மகள் திடீர் மரணம்! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி ரேடியோ பார்க் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவருடைய மனைவியை அனிதா (31). இவர்களுக்கு வித்தேஷ் (7) என்ற மகனும் நித்திஷா (3) என்ற மகளும் உள்ளனர். மணிகண்டன் நாமக்கல் மாவட்டத்தில் நுண்ணறிவு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்ராக பணிபுரிந்து வருகிறார். அவரது மகன் வித்தேஷ் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று காலை வணக்கம் போல் மணிகண்டன் பணிக்குச் சென்றார். அவருடைய மகன் வித்தேஷ் பள்ளிக்குச் சென்றார். வீட்டில் அனிதாவும் நிதிஷாவும் மட்டுமே இருந்துள்ளனர் இந்நிலையில் பிற்பகல் 2 மணி அளவில் மணிகண்டன் பணியில் இருந்து வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்தபோது வீட்டின் உள் அறையின் கதவு மூடப்பட்டிருந்தது. மணிகண்டன் கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு மின்விசிறியில் அவரது சேலையால் தூக்கு போட்டு அனிதா பிணமாக தூங்கிக் கொண்டிருந்தார்.
மேலும் அதே அறையில் வாயில் நுரையுடன் மகள் நிதிஷா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மணிகண்டன் தனது குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்து அந்த தகவலின் பெயரில் மணிகண்டன் வீட்டிற்கு வந்த போலீசார் அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஏதாவது தடயம் கிடைக்குமா என்று போலீஸார்கள் தேடி வந்த நிலையில் அனிதாவின் வீட்டில் தற்கொலைக்கு முன்பாக அனிதா பென்சிலால் எழுதிய டைரி கிடைத்தது. அந்த டைரியில் எனக்கு வாழ்வதற்கே பயமாக உள்ளது என்றும் தனது குழந்தையை தனியாக விட்டு செல்ல பயமாக இருக்கிறது என்றும் கூறியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அனிதா தனது குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு பிறகு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. அனிதா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற முழு விவரம் தெரியவில்லை இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.