இன்று தொடங்கும் முதல் ஒருநாள் போட்டி… விராட் கோலி விளையாடுவது சந்தேகம்!

0
199

இன்று தொடங்கும் முதல் ஒருநாள் போட்டி… விராட் கோலி விளையாடுவது சந்தேகம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து இன்று ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இந்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயம் காரணமாக அவர் விளையாட முடியாமல் போகலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அடுத்த போட்டியில் அவர் விளையாடுவார் என்று சொல்லப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

Previous articleஇந்த மாவட்டத்தில் அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு! தற்போதைய நிலவரம் என்ன?
Next articleசபரிமலையில் ஆடி மாத சிறப்பு பூஜை தொடங்குகிறது! இன்று முதல் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக  முன்பதிவு செய்து கொள்ளலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here