இந்த மாவட்டத்தில் அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு! தற்போதைய நிலவரம் என்ன?

0
60

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதன் காரணமாக, அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. முல்லை பெரியாறு வைகை அணை போன்ற அணைகளுக்கு நீர் பரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது என சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, திருப்பூர், உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜூலை மாதம் 12ஆம் தேதி வரையில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

கேரள மாநிலத்தை ஒட்டி இருக்கின்ற தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை குட்டி தீர்த்து வருகிறது. தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் இருக்கின்ற அணைகளுக்கு நீர்வரத்து தினசரி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

குறிப்பாக தேக்கடி மற்றும் முல்லை பெரியாறு அணைக்கட்டு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

அதனடிப்படையில், முல்லை பெரியாறு அணை பகுதியில் 43 மில்லி மீட்டர் மழை அளவு, தேக்கடியில் 28 மில்லி மீட்டர் மழை அளவு, கூடலூரில் 4.7 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி இருக்கிறது. அதேபோல வீரபாண்டி பகுதியில் 3.12 மீட்டர் மழையும், பதிவாகியுள்ளது.

ஆகவே மாவட்டத்தின் ஒட்டுமொத்தமாக என்பது 80 .70 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது, சராசரியாக 6.98 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி இருப்பதாக தெரிகிறது.

தேனி மாவட்டத்திலிருக்கின்ற வைகை அணை, சண்முக நதி அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை மற்றும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்பான விவரங்களை தற்போது காணலாம்.

21 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையின் தற்போதைய நீர்மட்டம் ஆனது 55.32 அடியாக இருக்கிறது. அணைக்கு வரும் நீர் வரத்தின் அளவு 1612 கனஅடியாக இருக்கிறது. 969 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மஞ்சளாறு அணையில் தற்போதைய நீர்மட்டம் ஆனது 49.2000 அடியாக இருக்கிறது. அணையின் முழு கொள்ளளவு 57 அடி என்று சொல்லப்படுகிறது. நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் இல்லை என சொல்லப்படுகிறது.

126.28 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 76.26 அடியாக இருக்கிறது. அணைக்கு நீர்வரத்து இல்லை, அதேபோல 03 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என சொல்லப்படுகிறது.

52.5 அடி உயரம் கொண்ட சண்முக நதி அணையின் நீர்மட்டம் 28.50 அடியாக இருக்கிறது. அனைக்கு வரும் நீர்வரத்தின் அளவு 5 கன அடியாக இருக்கிறது. அதேபோல இந்த அணையில் இருந்து நீர் வெளியேற்றம் செய்யப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

142 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 128.40 அடியாக இருக்கிறது. அனைத்தையும் நீர்வரத்தின் அளவு 2122 கனஅடியாக இருக்கிறது. அதேபோல 1611 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது,

முல்லைப் பெரியாறு அணையில் நேற்றைய நிலவரத்தினடிப்படையில் அணையின் நீர் வரத்து 1509 கன அடியாக இருக்கிறது இந்தநிலையில், இன்று 2122 கனஅடியாக நீர் வரத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.