விக்ரம் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பாராட்டிய ‘பிரேமம்’ இயக்குனர்!

0
177

விக்ரம் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பாராட்டிய ‘பிரேமம்’ இயக்குனர்!

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் விக்ரம் திரைப்படத்தைப் பாராட்டி பதிவு செய்துள்ளார்.

ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.  கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்த விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார். வெளியானது முதல் இப்போது வரை வெற்றிகரமாக ஓடிவரும் விக்ரம் திரைப்படம் இதுவரை 450 கோடி ரூபாய்க்கும் மேல் வெற்றிகரமாக திரையரங்குகள் மூலம் வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 170 கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் எந்தவொரு படமும் படைக்காத வசூல் சாதனை இது.

தமிழில் மட்டும் இல்லாமல் மற்ற தென்னிந்திய மாநிலங்கள் (பாலிவுட் தவிர்த்து) மற்றும் இந்தியாவுக்கு வெளியேயும் விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்துள்ளது. இந்நிலையில் ரிலீஸுக்கு பின்னர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் தயாரிப்பாளராக மட்டும் சுமார் 120 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளியான தமிழ் படங்களில் தயாரிப்பாளருக்கு இந்த அளவுக்கு லாபம் கொடுத்த தமிழ்ப் படம் எதுவும் இல்லை என கோலிவுட் வட்டாரமே ஆச்சர்யத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்போது ஓடிடியில் வெளியாகியுள்ளதால், பலரும் படத்தை மறுபடியும் பார்த்து தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தற்போது படத்தைப் பார்த்து பாராட்டி பேசியுள்ளார். அதில் கமல், விஜய் சேதுபதி, பஹத், செம்பன் வினோத் என அனைவரின் கதாபாத்திரங்களையும் பாராட்டியுள்ள அவர் ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Previous articleபடிக்கும் வயதில் இது தேவையா? பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோவில் கைது!!
Next articleகடைசி நேரத்தில் திடீர் திருப்பம்… முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் விராட் கோஹ்லி!